பாரம்பரிய பொங்கல் விழா; பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன்



மேலூர்; சூரக்குண்டு கிராமத்தில் நடந்த புரட்டாசி மாத திருவிழாவில் பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இக்கிராமத்தில் உள்ள சின்னடைக்கி, பெரிய அடக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் திருவிழா இன்று நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மந்தையில் ஒன்று கூடினர். கிராமத்து பெரியவர்கள் சுவாமி சிலைகளை முன்னே கொண்டு செல்ல பெண்கள் பொங்கல் வைக்கும் பூஜை பொருட்களை பித்தளை கலயத்திலும், மாவிளக்கு வைப்பதற்கான பொருட்களை சில்வர் பாத்திரங்களில் வைத்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு சுவாமி பாட்டு மற்றும் குலவையிட்டபடி சுமந்து சென்றனர். அங்கு மழை பெய்து விவசாயம் செழிக்கவும், எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்து சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இத் திருவிழாவில் பெரிய, சின்ன சூரக்குண்டு, அய்யர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்