கல்பாத்தி தேர் திருவிழா; முதல் பத்திரிகை மயிலாடுதுறை மாயூரநாதருக்கு படையல்



மயிலாடுதுறை; கேரள மாநிலம் கல்பாத்தியில் நடைபெறவுள்ள தேர் திருவிழாவுக்கான முதல் பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இன்று படைக்கப்பட்டது.


கேரள மாநிலம் பாலக்காட்டில் காசியில் பாதி கல்பாத்தி எனப் போற்றப்படும் கல்பாத்தியில் 4 அக்ரஹாரங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் தேர் திருவிழா கேரளா மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இங்கு நவ.7-ஆம் தேதி தொடங்கி நவ.17 வரை ஐப்பசி மாத தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் பூஜை செய்வதற்காக மயிலாடுதுறையில் இருந்து பாலக்காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிராமணர்களின் குடும்பத்தினர் அங்குள்ள அக்ரஹாரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் மயிலாடுதுறையில் இருந்து சென்ற காரணத்தால், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நடைபெறும் துலா உற்சவத்தைப் போன்று, கல்பாத்தியில் ஐப்பசி மாதத்தில் தற்போதும் தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


மாயூரநாதர் கோயிலில் உற்சவம் நடைபெறும் அதே நாள்களில் கல்பாத்தி காசி விஸ்வநாதர் கோயில், சாத்தபுரம் பிரசன்ன மஹாகணபதி கோயில், பழைய கல்பாத்தி பெருமாள் கோயில் மற்றும் புதிய கல்பாத்தி மகாகணபதி கோயில் ஆகிய இடங்களில் நிலா நதிக்கரையில் தமிழ் மற்றும் கேரள ஆசாரத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷ நாள்களில் நான்கு அக்ரகாரங்களிலும் வேதபாராயணம், விசேஷ அபிஷேகம், யாகசாலை பூஜைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறும். மேலும் தினம்தோறும் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு கிராமங்களுக்கு ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து பக்தர்களுக்கு அனுக்ரஹம் அளிக்கிறார். முக்கிய தினமான ஐப்பசி கடைசி நாளன்று (நவம்பர் 16) மாலை கல்பாத்தி சந்திப்பில் அனைத்து ரதங்களும் ஒன்றுகூடி காட்சியளிக்கும் அற்புதமான தருணத்தில் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு தேவரத சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விழாவைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவுக்கான முதல் பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சுவாமி முன்பு வைக்கப்பட்டு படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோயில் நிர்வாகி முரளி தலைமையில் நான்கு அக்ரஹார நிர்வாகிகள் மற்றும் சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாசாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர். கேரள மாநிலம் கல்பாத்தியில் நடைபெறவுள்ள தேர் திருவிழாவுக்கான முதல் பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இன்று படைக்கப்பட்டது. இங்கு நவ.7-ஆம் தேதி தொடங்கி நவ.17 வரை ஐப்பசி மாத தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்