பழநி மலையில் தூவப்பட்ட விதைப்பந்துகள் துவக்கப்பட்டன



பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பழநி மலை மீது விதைப்பந்துகள் துவக்கப்பட்டன.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு மூலம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. அவற்றை நேற்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் பழநி மலை மீது வீசப்பட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் வீசப்பட்ட விதைப்பந்துகள் மரமாக விளைய ஏதுவாக இருக்கும். இதுகுறித்து கோயில் இணைக் கமிஷனர் மாரிமுத்து தெரிவிக்கையில், "6000 விதைப்பந்துகள் துவப்பட்டுள்ளன. பழநி மலை மீது பசுமை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கான விதைப்பந்துகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பணிகள் நிறைவு செய்த பின் விதை பந்துகள் துவங்கப்படும்." என்றார். நிகழ்ச்சியில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்