சபரிமலை செல்ல சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

நவம்பர் 18,2025



கார்த்திகை மாதம் பிறந்ததும், மாலை அணிந்து சபரிமலை சென்று வருவது அதிகரிக்கும். அதற்காக, வாகனங்களை வாடகைக்கு எடுத்து, பக்தர்கள் கூட்டாக சென்று வருகின்றனர். அவ்வகையில், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை (ஓன் போர்டு) வாடகைக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்று, வட்டார போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்களில், இதுதொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.‘அய்யப்ப பக்தர்கள் கவனத்துக்கு...’ சபரிமலை செல்லும் பக்தர்கள், பயணத்துக்காக சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்து செல்ல கூடாது. மோட்டார் வாகன சட்டம் 1986 பிரிவு 192(ஏ) படி குற்றம். வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் உத்தரவின்படி, வட்டார போக்கு வரத்துத்துறை அதிகாரிகள், இத்தகைய அறிவிப்பு பலகையை, கோவில் தோறும் வைத்து வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் கூறினர். – நமது நிருபர் –: 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்