டிசம்பர் 10,2025
சபரிமலை; சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் உரக்குழி அருவி பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி வனத்துறை எச்சரித்துள்ளது.
சபரிமலை வருவதற்கு சாலக்கயம் - பம்பை, எருமேலி - பம்பை, சத்திரம் - புல் மேடு -சன்னிதானம் என மூன்று பாதைகள் உள்ளது. இதில் புல்மேடு பாதை சபரிமலைக்கு வரும்போது செங்குத்தான ஏற்றமே இல்லாத பாதையாகும். மாறாக முழுமையாக செங்குத்தான இறக்கம் ஆகும். நடப்பு மண்டல காலம் தொடங்கிய பின்னர் ஏராளமான பக்தர்கள் புல் மேடு பாதை வழியாக சன்னிதானம் வந்துள்ளனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் உரக்குழி அருவி பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி வனத்துறை எச்சரித்துள்ளது.