சபரிமலை: மண்டல பூஜையை முன்னிட்டு டிச.,26, 27ம் தேதிகளில் சபரிமலையில் தரிசனம் ..." />

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனம்; ஆன்லைன் முன்பதிவு துவங்கியது

டிசம்பர் 11,2025



சபரிமலை: மண்டல பூஜையை முன்னிட்டு டிச.,26, 27ம் தேதிகளில் சபரிமலையில் தரிசனம் செய்ய இன்று மாலை முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யலாம்.




சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தாண்டு மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில், வரும் டிச.,26, 27ம் தேதிகளில் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 மணிக்கு துவங்குகிறது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்