சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்

ஜனவரி 12,2026



சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு கேரள உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி மகரஜோதிக்கு முந்தைய தினமான 13 - ம் தேதி 35 ஆயிரம் பேருக்கு விருச்சுவல் கியூ வழியாகவும் 5 ஆயரம்பேருக்கு ஸ்பாட் புக்கிங் கிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி மகரஜோதி தினத்தில் விருச்சுவல் கியூவில் 30 ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங்கில் 5 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 முதல் 19- ம் தேதி வரை தினமும் 50 ஆயிரம் பேருக்கு விருச்சுவல் கியூவில்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  திருவாபரணபவனி 14- ம் தேதி சன்னிதானத்தில் வந்து சேரும். அன்றைய தினம் காலை 10:00 மணி முதல் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும், 11.00 மணி முதல் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கும் பக்தர்கள் செல்ல முடியாது. அன்று மாலையில் திருவாபரண பவனி சன்னிதானம் வந்து சேர்ந்த பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்படுவார்கள்.


பம்பை ஹில்டாப்பில் 12- ம் தேதி காலை 8:00 மணி முதல் 15 - ம் தேதி பகல் 12:00 மணி வரை தனியார் வாகனங்கள் பார்க்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வந்துள்ள வாகனங்களும் நிறுத்தப்படும். தனியார் வாகனங்கள் நிலக்கல்லில் பார்க்கிங் செய்ய வேண்டும். 13- ம் தேதி மாலை 6:00 மணிக்கு பின்னர் எரிமேலில் இருந்து பெருவழிப்பாதையிலும், அழுதை கடவில் இருந்து 14 ஆம் தேதி காலை 8:00 மணி முதலும், முக்குழியில் இருந்து 14 -ம் தேதி காலை 10:00 மணிக்கு பின்னரும் பக்தர் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14-ம் தேதி மாலை 4:00 மணிக்கு பின்னர் புல் மேட்டில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. அவர்கள் புல் மேட்டில் மகரஜோதி தரிசனம் முடித்துவிட்டு காட்டுப்பாதை வழியாக சன்னிதானம் வர அனுமதி இல்லை.அங்கிருந்து அவர்கள் திரும்பி சத்திரம் வழியாகவோ, வள்ளக்கடவு வழியாகவோ சென்று சன்னிதானம் வர வேண்டும். காட்டு பகுதிகளில் குடில்கள் கட்டி ஜோதி தரிசனத்திற்கு காத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது போல சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க தனி போலீஸ் படை நியமிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்