திருமங்கலம் முனியாண்டி கோயிலில் அசைவ அன்னதானம்



திருமங்கலம்: திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயிலில் தைப்பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த 59ஆவது ஆண்டு பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் அசைவ உணவக உரிமையாளர்கள் ஒன்று கூடினர். மாலையில் நுாற்றுக் கணக்கான பெண்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பழங்கள், மலர் தட்டுகள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து 100 ஆடுகள் 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்