பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை அன்ன வாகன உற்சவம் மற்றும் நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 6:30 மணிக்கு சேஷ வாகன திருவீதி உலா நடக்கிறது. செவ்வாய்க்கிழமை மாலை, 6:30 மணிக்கு கருட வாகன உற்சவம், நாம சங்கீர்த்தனம், பஜனை நடக்கிறது. புதன்கிழமை காலை, 9:00 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.