விருதுநகர்: விருதுநகரில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா நடக்கிறது. இதையடுத்து நேற்று முன்தினம் திருக்கல்யாணம்நடந்தது. நேற்று காலை தேரோட்டம் கோயில் வளாகத்தில் இருந்து துவங்கி மேல ரத வீதி வழியாக வந்து மெயின் பஜார் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி, அம்பாளின் அருளை பெற்றனர்.