குலசை முத்தாரம்மன் தசரா விழா துவங்கியது: கடற்கரையில் குவிந்த பக்தர்கள்



பகிர்க copied

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. புனித நீராடி மாலை அணிய கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


குலசேகரன்பட்டணம் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. இத்திருவிழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவர். நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை பிரிப்பார்கள். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுக்களும், மேளம், டிரம் செட், குறவன், குறத்தி, கும்பாட்டம், குரூப் டான்ஸ், போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். எனவே தசரா நாட்களான 10 நாட்களும் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களே காட்சியளிப்பார்கள். இச்சிறப்பு மிக்க தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புனித நீராடி மாலை அணிய கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்கள் மதியம் மட்டும் பச்சரிசி சாதம் உட்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்வது குறிபிடத்தக்கது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்