சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்



பகிர்க copied

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. இங்குள்ள, அருவியூர் தெற்குவளவு நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட லட்சுமண், அனுமன், சீதா சமேத ராமர் கோயிலில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு பஜனை பாடப்பட்டது. 11:00 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமணன், அனுமன், சீதா சமேத ராமர் காட்சியளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருவியூர் தெற்கு வளவு நகரத்தார் செய்திருந்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்