திருப்புல்லாணி கள்ளழகர் கோயிலில் மண்டலாபிஷேக விழா



பகிர்க copied

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் கடந்த ஆக., 30 அன்று திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு மண்டல பூஜை விழா நடந்தது. நேற்று காலை மூலவர் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு யாகவேள்வி வளர்க்கப்பட்டது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி, சோனை, கருப்பையா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்