காமாட்சி அம்மன் கோவிலில் கன்னியா பூஜை விமரிசை



பகிர்க copied

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, 108 பெண்கள் பங்கேற்ற சுகாசினி பூஜையும், 108 குழந்தைகள் பங்கேற்ற கன்னியா பூஜையும், நேற்று விமரிசையாக நடைபெற்றது.

உலக மக்கள் நன்மைக்காக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி நாட்களில் இப்பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, சங்கர மடத்தில் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக, ஆறாம் நாளான நேற்று, காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் தொடங்கின.

காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானிகர் சுரேஷ் சாஸ்திரிகள் சங்கல்பம் செய்து, பூஜையை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, புஷ்பாஞ்சலியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்தனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்