திருப்பாசேத்தியில் தயாராகும் காணிக்கை அரிவாள்



பகிர்க copied

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை அரிவாள் தயாரிக்கப்படுகின்றன.


திருப்புவனம் தாலுகா கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தி கருவிகள் தயாரித்துள்ளனர். இன்று வரை இரும்பு பட்டறை தொழில் நடந்த வண்ணம் உள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் பழைய இரும்பை உருக்கி தேவைக்கு ஏற்ப அரிவாள், மண்வெட்டி, கோடாரி, கடப்பாரை தயாரிக்கப்படுகின்றன.


விவசாயத்தில் இயந்திரங்கள் வருகைக்கு பிறகு தொழில் நலிவடைந்து வந்த நிலையில் நேர்த்தி கடன் அரிவாள் எனப்படும் காணிக்கை அரிவாள் தயாரிப்பிற்கு மாறி விட்டனர். அய்யனார் மற்றும் கருப்பண்ண சாமி கோயில்களுக்கு பக்தர்கள் ஒரு அடி முதல் 25 அடி உயர அருவா வரை காணிக்கையாக வழங்குகின்றனர்.தென் மாவட்டங்களில் மாரநாடு கருப்பண்ண சாமி, மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ண சாமி கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் ராட்சத அரிவாள்கள் ஏராளமாக உள்ளன.


திருப்பாச்சேத்தி ரவி கூறுகையில்: வட மாவட்டங்களில் இருந்தும் காணிக்கை அரிவாள் வாங்க பக்தர்கள் வருகின்றனர். அரியலூர் மாவட்ட பக்தருக்காக 80 ஆயிரம் ரூபாய் செலவில் 25 அடி உயர அரிவாள் தயாரித்து கொடுத்துள்ளோம். எடை 500 கிலோ, 15 நாட்கள் மூன்று பேர் சேர்ந்து இந்த அரிவாள் தயாரித்தோம், கைப்பிடி மட்டுமே மூன்று அடி நீளமாகும், அரிவாளின் நுனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்கல மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.


சிமென்ட் தளத்தில் நிலை நிறுத்தும் வண்ணம் கைப்பிடி உள்ளிட்ட பகுதிகளில் துளையிட்டுள்ளோம், நேர்த்தி கடன் அரிவாள் தயாரிக்க ஒரு அடி நீளத்திற்கு ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை அரிவாளின் எடைக்கு ஏற்ப மாறுபடும் மதுரையில் இருந்து பழைய இரும்புகளை வாங்கி வந்து உருக்கி தட்டி தட்டி அரிவாள் தயாரிக்கப்படுகிறது. விவசாய கருவிகள் வாங்க ஒருசிலர் மட்டுமே வருகை தருகின்றனர். ஆடி மற்றும் மாசி மாதங்களில் நேர்த்திகடன் அரிவாள் தயாரிக்க ஆர்டர் வரும், என்றார்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்