சபரிமலை, மாளிகைப்புறம் கோயிலுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு



பகிர்க copied

சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.


சபரிமலையில் அடுத்த மாதம் கார்த்திகை, 1ம் தேதி பதவி ஏற்க வேண்டிய புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு, இன்று சன்னிதானத்தில் நடந்தது. சன்னிதானத்தில் நடைபெற்ற குலுக்கல் தேர்வில் திருவனந்தபுரம் அரிக்கரையை சேர்ந்த சுப்பிரமணியன் நம்பூதிரி சபரிமலைக்கும், மணியூரை சேர்ந்த தாமோதரன் நம்பூதிரி மாளிகைப்புறத்துக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் நடத்துவர்.


செய்தியாளர்களிடம் பேசிய ​சுப்பிரமணியன் நம்பூதிரி, "இது ஐயப்ப சுவாமியின் எல்லையற்ற கருணை; வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெரும் பாக்கியம் என்றார். 


​தாமோதரன் நம்பூதிரி கூறியதாவது;  சிறுவயது முதலே இறைப்பணியில் கழித்த என் வாழ்க்கைக்குக் கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரம் இது என பெருமிதத்துடன் கூறினார்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்