பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், விஜயதசமியையொட்டி, எழுத்தாணிப்பால் விழா நடந்தது.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தில், குழந்தைகள், கல்வி மற்றும் கலைதுறையில் சிறந்து விளங்க, எழுத்தாணி பால் நடத்தப்படும். இந்தாண்டு, விஜயதசமியையொட்டி, எழுத்தாணிப்பால் விழா, பேரூர் மடத்தில் இன்று நடந்தது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தேன் தடவிய எழுத்தாணி கொண்டு, குழந்தைகளின் நாவில், ஓம் என எழுதினார். தொடர்ந்து, குழந்தைகளின் கையை பிடித்து, வாழை இலையில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த நெல்மணியில் எழுத கற்று கொடுத்தார். இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, எழுத்தாணி பால் வழங்கி, கல்வி துவங்கப்பட்டது.