பெங்காளி மக்களின் செந்தூர் திருவிழா: வெடி மருந்து தொழிற்சாலையில் பரவசம்



பகிர்க copied

குன்னூர்: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்காளி இன மக்களின், துர்கா பூஜையில், பாரம்பரிய செந்தூர் திருவிழா கொண்டாடப்பட்டது.


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆண்டுதோறும் நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு சார்பில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 65-வது ஆண்டு நவராத்திரி துர்கா பூஜை விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் மகா சப்தமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி, அன்னதானம், சந்தியா ஆரத்தி, இன்னிசை நிகழ்ச்சி, பஜனை உட்பட கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மனின் காலடியில் பிரபஞ்சம் அடக்கம் என்பதை குறிக்கும் வகையில், அம்மனின் கால் பாதத்தை கண்ணாடியில் பார்த்து பக்தர்கள் வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.


பிறகு, சுமங்கலி பூஜையில், அம்மனுக்கு செந்தூரம் திலகமிட்டு, பூஜைகளை, மகளிரே நடத்தி வழிபட்டனர். மாலையில், இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. கார்டைட் பேக்டரி முதன்மை பொது மேலாளர் விகாஸ் பூர்வார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கமிட்டி தலைவர் தலைவர் ஸ்வேதா பூர்வார், துணை தலைவர்கள் சங்கர் தாஸ், பாரிக் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, செயலாளர்கள் சாதன் குமார் கோஷ், ஜிதேந்திர குமார் சின்கா உட்பட நிர்வாகிகள் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்