சிவன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்ற பிரதோஷ வழிபாடு



பகிர்க copied

கண்டாச்சிபுரம்,அக் 24- கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ கால பூஜை நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ கால பூஜையையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அலங்காரமும் நடந்தது. பிரதோஷ கால உற்சவமூர்த்தி கோவிலின் உட்பிரகாலத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழ் வேதவார வழிபாட்டு சபையின் சார்பில் தேவார,திருமுறை பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கண்டாச்சிபுரம், மடவிளாகம், அங்குராயநத்தம் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல் சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன் கௌரிசங்கர் வெங்கடேசன் மற்றும் உபயதாரர் சதானந்தம் ஆகியோர் செய்தனர்.


நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.முன்னதாக நந்தி சிலைக்கு 21 வகை திரவிய அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது.பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம்,காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், கோபால்பட்டி சிவன் கோவில்,கணவாய்ப்பட்டி சிவன் கோயில்,குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்