கோவை : ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் மூலவர் துர்கா லட்சுமி சரஸ்வதி மற்றும் உற்சவ விக்கிரகங்களுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.