சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சனேயர் கோவிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் வீரசக்தி ஆஞ்சனேயர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்., 7 ம் தேதி நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டல பூஜை, அபிேஷகம், சிறப்பு தீபாராதனை நடந்து வந்தது. நேற்று 48 நாட்கள் முடிந்த நிலையில் சிறப்பு ஹோமங்கள், கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. ஹோமத்தில் வைக்கப்பட்டுள்ள கும்ப கலசம் புறப்பாடு நடந்து ஸ்ரீவீரசக்திஆஞ்சனேயர், விஸ்வரூப ஆஞ்சனேயர், கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர் கலசத்திலிருந்த புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். கோதண்டராமர் சீதாதேவி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.