அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்



பகிர்க copied

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி கடந்த, 22 ந்தேதி இரவு அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, 23 ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, மூன்றாம் கால யாக பூஜை, சகஸ்ரநாம ஹோமம் நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாகபூஜை, நாடி சந்தானம்,கோ பூஜை, கஜ பூஜை நடந்து காலை 8.30 மணிக்கு மூலவர், ராஜகோபுரம் விமானங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்