புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொதுஒக்கூர் என்ற ஊரில், வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிள்ளையார் கோவில் திடலுக்கு அருகே கல்வெட்டு ஒன்று, மண்ணில் புதையுண்டு கிடப்பதை கண்டெடுத்தனர்.
இது குறித்து, காளிதாஸ் கூறியதாவது:
மிழலைக் கூற்றது வட பாம்பாறாற்று ஒக்கூர் மாகாணத்து பொது ஒக்கூர், இவ்வூரை உதயமார்த்தாண்ட வீரபாண்டியன் ஆட்சி செய்து வந்துள்ளார்.
ஒக்கூர் மாகாணம், தெற்கு வட்டம், பொதுவக்கூர் கிடைமடைக்கு வெளியே பாப்பா நேந்தல், சேரத்திற்குரிமையும் மார்த்தாண்டபுரம், பனஞ்செய், இலுப்பைச்செய், அவல் செய், சாவல் கட்டு செய், பட்டவருத்தி புரச நேரி, லெட்சுமி வயல், கரூர் வயலுக்கு மேற்கேயுள்ள வயல்கள், தச்சன் ஊரணி தெற்கு வயல்கள். இதில் கண்ட வயல்களுக்கு பொதுவ கூர்கண்மாய் தண்ணீர் பாய்ச்சல் என்று சாசனமாக இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
இம்மாதிரியான நீர்ப்பாசன முறை, இன்றும் நம் நாட்டிற்குத் தேவை. இதுபோன்ற வரலாற்று நீதி புகட்டும் அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.