புத்தரி தினத்திற்காக கேரளா சென்று நெல் கதிர்களை சுமந்து வந்து பூஜை செய்த பழங்குடியின மக்கள்



பகிர்க copied

பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் சென்று நெற்கதிர்களை பழங்குடியின மக்கள் சுமந்து வந்தனர்.


பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன், மவுண்டாடன் செட்டி சமுதாய மக்கள் மத்தியில், புத்தரி தின விழா ஆண்டுதோறும் ஐப்பசி 10-ம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பழங்குடியின மக்கள் 10 நாட்கள் விரதம் இருப்பார்கள். அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு கோவிலில் குடில் அமைத்து, விரதம் இருப்பதுடன் தினசரி மூன்று வேளை இறைவனைத் வணங்கி, விவசாயம் மேம்படவும், விவசாயிகள் நலமுடன் வாழவும், நெற்பயிர்கள் நன்றாக விளைந்து உணவு பஞ்சம் இன்றி மக்கள் வாழவும் வேண்டி விரதம் இருப்பார். இதில் பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த புத்தரி தின விழாவிற்காக, உள்ளூர் பகுதியில் நெல் விவசாயம் இல்லாத நிலையில், கேரள மாநிலம் வயநாடு செட்டி ஆலத்தூர் என்ற பகுதிக்கு சென்று, அங்கு வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை, நிலத்தின் உரிமையாளர் அனுமதியுடன் பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள் இணைந்து பூஜை செய்து பறித்தனர். 


பின்னர் அங்கிருந்து வனப்பகுதி வழியாக விரதம் இருந்த செங்குட்டவன் என்பவர் தலைமையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் சுமந்து வந்து, கோவிலில் ஒப்படைத்தனர். அங்கு மேல் சாந்தி சுதீஷ் தலைமையில் நெற்கதிர்களுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் நெற்கதிர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அம்மன்காவு, பெக்கி, புலியாடி, உப்பட்டி, சேலக்குன்னா, ஏலமன்னா உள்ளிட்ட கோவில்களுக்கும் முதலில் நெற்கதிர்கள், அரச மற்றும் மா இலை இணைத்து வழங்கப்பட்டதுடன், அனைத்து பக்தர்களுக்கும் நெற்கதிர்கள் வழங்கப்பட்டு, பிரசாதம் கொடுக்கப்பட்டது. பாரம்பரியமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு, கோவில் மேலாளர் சந்தியா தலைமையில் கோவில் புனரமைப்பு குழுவினரும், பழங்குடியின சமுதாய நிர்வாகிகள் குமார், மணிவேலன், வாசுதேவன் தலைமையிலான குழுவினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்