காஞ்சிபுரம் மங்களேஸ்வரர் கோவில் அருகில் மங்கள தீர்த்தம் குளம் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் பராமரிப்பில் உள்ள இந்த குளம், 2018ல், சுற்றுலா துறை சார்பில், பிரசாத் திட்டத்தின் கீழ், 11.85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. ஆனால், குளத்திற்கு மழைநீர் வரும் வடிகாலை முறையாக துார்வாரி சீரமைக்கவில்லை.. இதனால், காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் பருவமழைக்கு மங்களதீர்த்த குளம் முழுமையாக நிரம்புவில்லை. இந்நிலையில், குளத்தில் களைசெடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன. எனவே, மங்களதீர்த்த குளத்தில் வளர்ந்துள்ள களைசெடிகளை அகற்றவும், மழைநீர் வரும் அனைத்து வரத்து வடிகாலையும் துார்வாரி சீரமைக்க கோவில் நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.