திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற தமிழக வேளாண் துறை அமைச்சர்



பகிர்க copied

மயிலாடுதுறை: தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார், சைவ திருமுறை மாநாடு குறித்து கேட்டறிந்தார் .


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் கடந்த வாரம் சைவத் திருமுறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க தமிழக வேளாண்துறை அமைச்சர், வினோத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அலுவல் பணி காரணமாக அமைச்சர் பங்கேற்காத நிலையில் இன்று, திருவாவடுதுறை ஆதீனம் திருமடத்திற்கு அமைச்சர் வினோத் நேரில் வருகை புரிந்து, திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து மாநாடு குறித்து குரு மகா சன்னிதானத்துடன் கலந்துரையாடினார்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்