சென்னை: சேஷாத்ரி சுவாமிகளின் 97வது ஆராதனை விழாவையொட்டி, ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலுாரில், ஆறு விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊஞ்சலுாரில் உள்ள சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் நடக்க உள்ள 97-வது ஆராதனை விழாவையொட்டி, டிச., 27 முதல் ஜன., 1-ம் தேதி வரை, ஊஞ்சலுார் ரயில் நிலையத்தில் ஆறு விரைவு ரயில்கள், ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.
எழும்பூர் – கர்நாடக மாநிலம், மங்களூரு விரைவு ரயில், டிச., 26 முதல் 31ம் தேதி வரை, மங்களூரு – எழும்பூர், நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில், திருச்சி – கேரள மாநிலம் பாலக்காடு டவுன், பாலக்காடு டவுன் – திருச்சி ரயில்கள், வரும் டிச., 27 முதல் ஜன., 1ம் தேதி வரை நின்று செல்லும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.