தானியங்கி இயந்திரம் மூலம் அரவணை விநியோகம்: சபரிமலையில் தொடக்கம்

நவம்பர் 19,2026



பகிர்க copied

சபரிமலை: சபரிமலையில் தானியங்கி இயந்திரம் மூலம் அரவணை பிரசாதம் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.


சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அரவணை, அப்பம் ஆகும். மண்டல மகர விளக்கு சீசனில் 25-க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் செயல்பட்டாலும் அதில் எப்போதும் நீண்ட வரிசை காணப்படும். பல நேரங்களில் தட்டுப்பாடும் ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு அரவணை உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பிரசாத தட்டுப்பாடு ஏற்படாது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதற்கிடையில் அரவணை பிரசாதம் வழங்குவதற்காக தானியங்கி இயந்திரம் மாளிகைப்பறம் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் யு.பி .ஐ. மூலம் பணம் செலுத்தி ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 5 டின் அரவணை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அன்னதான மண்டபம், மாளிகைபுரம் கோயிலுக்கு செல்லும் வழி ஆகியவற்றில் பணம் செலுத்தும் கியோஸ்க் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி ரசீதைப் பெற்று குறிப்பிட்ட பிரசாத விற்பனை கவுண்டர்களில் கொடுத்து அப்பம், அரவணை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய வசதி பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


பகிர்க copied

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்