சபரிமலை நிலக்கல்லில் ‘மல்டி லெவல்’ கார் பார்க்கிங்: அமைச்சர் தகவல்

நவம்பர் 21,2026



பகிர்க copied

மூணாறு: நிலக்கல்லில் ‘மல்டி லெவல்’ கார் பார்க்கிங் அமைக்கப்படும் என கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு பேபிஜான் தெரிவித்தார்.


எருமேலியில் இருந்து வனத்திற்குள் பெருவழியில் வரும் ஐயப்ப பக்தர்கள் கேரளா இடுக்கி மாவட்டம் அழுதகடவு வழியாக சன்னிதானம் செல்ல வேண்டும். அமுதகடவு பகுதியில் வனத்திற்குள் செய்துள்ள வசதிகள் குறித்து வனத்துறை அமைச்சர் ஷிபுபேபிஜான் இன்று பக்தர்களிடம் நேரில் கேட்டறிந்தார்.


அமைச்சர் கூறியதாவது: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களுக்கு ‘மல்டிலெவல்’ கார் பார்க்கிங் சோலார் மூலம் இயக்கும் வகையில் அமைக்கப்படும். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு மின்சார பஸ்கள் இயக்கப்படும். அதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பசுமை ஆற்றலை பயன்படுத்தியும், வன பாதுகாப்பை உறுதி செய்தும் பக்தர்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். சபரிமலையில் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் திருப்பதி மாதிரியை செயல்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. இயற்கைக்கு உகந்த பொருட்கள் மற்றும் மாற்று பொருட்களுக்கு மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். சபரிமலை சீசனில் மட்டும் பக்தர்களுக்கு தற்காலிகமாக வசதிகள் செய்யப்படும் வழக்கம் கைவிடப்பட்டு நிரந்தரமாக வசதிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மண்டல, மகரவிளக்கு சீசன் முடிந்தவுடன் அரசு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தும் என்றார்.


பகிர்க copied

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்