பந்தளம்



சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். செங்கனூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம் சென்றால் பந்தளத்தை அடைந்து விடலாம். ஆனால் பெரும்பாலான பக்தர்கள் பந்தளத்தைத் தவிர்த்துவிட்டு, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் வழியாக சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள். ஐயப்பன் வளர்ந்த இடம்தான் இந்தப் பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது. பந்தளத்தில் அமைந்துள்ள சன்னிதியில், புலியுடன் நிற்பதுபோல் காட்சி தருகிறார் மணிகண்டன். பந்தள மகாராஜாவிடம் வளர்ந்தபோது, தாம் கடவுளின் அவதாரம் என்று தெரியமாலேயே, சுமார் 12 ஆண்டுகள் ஓடி ஆடி விளையாடி புனிதம் சேர்ந்த இடம் இது. மணிகண்டனாக வளர்ந்த அரண்மனையும், அவர் படித்துப் பயன்படுத்திய ஓலைகளும் இன்னும் அங்கு உள்ளன. அங்குள்ள குளமானது, ஐயப்பன் குளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாகும். அந்தக் குளத்தின் நீர் எப்போதுமே வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும் என்பது தனிச்சிறப்பு.

மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ளா அதிசய காட்சி.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்