சத்யசாய் டிரஸ்டின் பணிகள் | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சத்யசாய் டிரஸ்டின் பணிகள்


பகவான் சத்யசாய் பாபாவால், 1972, செப்.2ல் சத்யசாய் சென்ட்ரல் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை போதிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏழை நோயாளிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை நகர மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது தவிர நாடு முழுவதும் கலாசாரம், பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் கலைக்கூடங்கள், சமூக சேவை மையங்கள் நிறுவப்பட்டு பாபாவின் போதனைகளைப் பரப்பும் பணி நடக்கிறது. வறுமை ஒழிப்பு, மருத்துவம், கல்விசேவை மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் இந்த டிரஸ்ட் செயல்படுத்துகிறது.