ஸ்ரீ சத்யசாய் நிறுவன பட்டமளிப்பு விழா; நாளை பங்கேற்கிறார் துணை ஜனாதிபதி | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

ஸ்ரீ சத்யசாய் நிறுவன பட்டமளிப்பு விழா; நாளை பங்கேற்கிறார் துணை ஜனாதிபதி


புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.


ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதையொட்டி, ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 44வது பட்டமளிப்பு விழா, நாளை மாலை 4 மணியளவில் நடக்கிறது. பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ராகவேந்திர பிரசாத் துவக்க உரை நிகழ்த்த உள்ளார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்த உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் உயர்கல்வி நிறுவனங்களின் வேந்தர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சக்கரவர்த்தி, இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.