Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசி விஸ்வநாதர்
  அம்மன்/தாயார்: குங்குமசுந்தரி அம்மன்
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: காவிரி தீர்த்தம்
  புராண பெயர்: உமையாள்புரம்
  ஊர்: உமையாள்புரம்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் இங்கு எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார்.  
     
 தல சிறப்பு:
     
  அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம் - 614 209, தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 9442584410 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்யதேசங்களான கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இதன்மூலம், ஒரே நேரத்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்கவும் வசதியிருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  பெண்கள் தங்களது கணவர் ஆரோக்கியமாக இருக்கவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

மேலும், அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர். இத்தலத்தில் வேண்டிக்கொள்ள காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  வளைகாப்பு வைபவம்: அம்பாள் சன்னதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த கமலா என்ற பெண், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவளாக இருந்தாள். ஒருசமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். கணவன் குணமாக வேண்டி அப்பெண், இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால் அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. அம்பாள் சன்னதி எதிரே ராஜமகா வல்லபகணபதி தனி சன்னதியில் இருக்கிறார்.காவிரி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், பைரவர் சன்னதிகள் உள்ளன. தலவிருட்சம் வில்வம். கந்தர்வப்பெண் உருவாக்கிய தீர்த்தம் ஊர் எல்லையில் இருக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, "நானே படைப்புக்கடவுள்' என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர்
தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது.

உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், "உமையாள்புரம்' எனப்பெயர் பெற்றது.

மற்றொரு வரலாறும் இத்தலத்துக்கு உண்டு. விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டி தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar