Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர்
  தல விருட்சம்: நாகலிங்க மரம்
  ஊர்: கீழவாசல்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆவணி மாதம் 10 நாள் நடைபெறும் விழாவில், விநாயக சதுர்த்திக்கு மறுநாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பானது.  
     
 தல சிறப்பு:
     
  உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.  
   
    
 பொது தகவல்:
     
  சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்ற பெயரும் உண்டு.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், கொழுக்கட்டை படைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலை வெள்ளை விநாயகர் கோயில் என்று கேட்டால் தான் அனைவருக்கும் தெரியும். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்சவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார். சுவாமிகள், இங்கே 1008 பைரவ பூஜை செய்ததாகவும் சொல்கின்றனர்.  வியாழக் கிழமைகளில் ஸ்ரீபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன. ஸ்ரீநடராஜரின் சுதைச் சிற்பத்தையும் இங்கு தரிசிக்கலாம். விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை, தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறுமாம். 3- ஆம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம்!
 
     
  தல வரலாறு:
     
 

வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்; அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar