|
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கைலாசநாதர் |
|
அம்மன்/தாயார் | : |
சிவகாமசுந்தரி |
|
ஊர் | : |
லால்குடி |
|
மாவட்டம் | : |
திருச்சி
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
சிவராத்திரி, நவராத்திரி, நாக சதுர்த்தி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நாக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
லால்குடி, திருச்சி. |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
பிராகாரத்தின் கிழக்குத் திசையிலுள்ள அரசமரத்தின்கீழ் பிள்ளையார், நாகர், தட்சிணாமூர்த்தி, சத்ய நாராயணர் திருமேனிகள் உள்ளன. வடக்கில் சண்டீஸ்வரரின் சன்னதி உள்ளது. சூரியன், சந்திரன், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் திருமேனிகளும் உள்ளன. நவகிரக நாயகர்கள் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கின்றனர்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று இங்குள்ள அரச மரத்தை 108 முறை சுற்றி வந்து பூஜை செய்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தாலிபாக்கியம் நிலைத்திட அன்னை சிவகாம சுந்தரியை வழிபாடு செய்கின்றனர்.
| |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
கோயிலின் உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தைத் தொடர்ந்து மகாமண்டபம் உள்ளது. எதிரே அம்மன் தனிச்சன்னதியில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அங்குச-பாசம் ஏந்தி அபயவரதம் காட்டும் அழகுத் திருக்கோலம். இடதுபுறம் கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகன், வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள்.
மாரியம்மன் இங்கு செல்லம் மாரியம்மன் என்ற வித்தியாசமான பெயரோடு தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வழக்கமான சிவாலய விழாக்களோடு நவராத்திரியில் இறைவனுக்கும், அம்மனுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ஒருமுறை இவ்வுலகை ஆளும் பரமேஸ்வரனுக்கு உலக உயிர்கள் அனைத்திற்கும் அவற்றின் தேவையறிந்து, அதை அளித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த ஆசையை தன்னில் பாதியான அம்பிகையுடன் சேர்ந்து நிறைவேற்ற எண்ணினார். உடனே அவர் அம்பிகையின் மீது அருட்பார்வை வீச, அவளிலிருந்து ஒரு அம்மன் தோன்றி சிவனின் விருப்பத்தை நிறைவேற்றினாள். இவளுக்கு சிவகாம சுந்தரி என்ற திருநாமம் ஏற்பட்டது. பிறைசூடனுக்குப் பிரியமானவள் என்பதே இதன் பொருள். கயிலாயநாதனின் கருத்தினை ஈடேற்றும் சிவகாமசுந்தரியாக அம்பிகை அருளாட்சி புரியும் தலங்களில் இத்தலமும் ஒன்று.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நாக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|