Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கங்கையம்மன்
  தல விருட்சம்: அரசு, வேம்பு
  ஊர்: வண்ணாந்துறை
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மனின் மூலஸ்தானத்தின் கீழ் மண்ணால் ஆன அம்மனின் சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு மேல் புதிய அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை, பெசன்ட் நகர், சென்னை.  
   
    
 பொது தகவல்:
     
  திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட அம்மன் மண்ணால் ஆனது என்பதால் அதனை பூமிக்குள் பிரதிஷ்டை செய்து, அதற்கு மேல் அத்தேவியின் திருநாமத்துடன் கூடிய புதிய சிலையை 1972 - ல் மறு பிரதிஷ்டை செய்துள்ளனர். இவளுக்கு ராஜராஜேஸ்வரி என்ற திருநாமமும் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  நினைத்த காரியம் நிறைவேற, நோய் நொடியில்லாமல் வாழ இங்குள்ள அம்மனை வழிபாடு செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகுகால அபிஷேகத்துடன் கூடிய வழிபாடும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் சிறப்பாக அலங்காரத்துடன், தீப வழிபாடும் நடைபெறுகிறது. 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் வேங்கடேச பெருமாள், சரஸ்வதி, லட்சுமி, துர்கை ஆகிய முத்தேவியர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் நாகர் பிரதிஷ்டையுடன் வலம் வரும்போது அப்பன் அம்மையின் ஆசியுடன் சர்ப்பதோஷமும் நீங்கப் பெறலாம். மேலும் நாகர்களை நேர் எதிரில்  சனி பகவான் பார்த்தவாறு, நவகிரக வரிசையும் இருப்பதால் தர்மகாரகனின் ஆசியும் பெற்று விமோசனம் அடையலாம்.

ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகுகால அபிஷேகத்துடன் கூடிய வழிபாடும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் சிறப்பாக அலங்காரத்துடன், தீப வழிபாடும் நடைபெறுகிறது. மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கும், வியாழக்கிழமைகளில் ஷீரடி சாயிபாபா பக்தர்களின் பஜனை வழிபாடும், கார்த்திகையில் ஐயப்ப பக்தர்கள் இங்கிருந்து இருமுடி எடுத்துச் செல்வதை விருப்பமான ஒன்றாக கடைபிடிப்பதும் நடைபெறுகிறது.

கங்கை அம்மனுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுணர்மியிலும் லலிதா சஹஸ்ர நாமமும், திருவிளக்கு பூஜையும், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டிக்கு முறையே விநாயகர், முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
 
     
  தல வரலாறு:
     
  தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வூர்மக்கள்  திருமலையாம் திருப்பதிக்குச் சென்று சில நாட்கள் தங்கி திருமலையானை ஆனந்தமாக தரிசித்தார்கள். தரிசனம் முடிந்து மறுநாள் கிளம்பலாம் என்று உறக்கத்திற்காக கண்ணயர்ந்த நேரத்தில் கனவில் ஒரு பெண் தெய்வச் சிலை தோன்றி, நான் உங்களுடன் வரப் போகிறேன். உங்களுள் ஒருத்தியாய் இருந்து அருள் ஆட்சி செலுத்துவேன் என்றும் என் பெயர் கங்கை அம்மன் என்றும் கூறியதாக கண்டிருக்கிறார் பெரியவர் ஒருவர். என்னவென்று புரியாமல் திருமலையானை வணங்கி திரும்பி வரும் பாதையில் கனவில் கண்டது போன்ற ஒரு பெண் உருவ சிலை சுட்ட களிமண்ணால் ஆனது கண்ணில் பட்டது. கண்ட கனவு பலித்தது என்ற ஆனந்தத்துடன் அச்சிலையை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். சிறிது தூரம் நடந்தவுடனே பாதையில் வேறொரு வழிப் போக்கர் பெரியவர் அம்மன் சிலையைப் பார்த்து மகிழ்ச்சி பொங்க மெய்சிலிர்த்தார். பின்னர் தன் கையில் இருந்த கங்கை தீர்த்தத்தைத் தந்து இதனைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் என்று தந்தாராம். சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் கங்கை தீர்த்தம் கிடைப்பது என்பது எளிதான விஷயமல்ல. கங்கை தீர்த்தத்துடன் திருப்பதியில் கிட்டிய அம்மன் சிலை என்பதால் அருள்மிகு திருப்பதி கங்கை அம்மன் என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த ஆரம்பித்தார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மனின் மூலஸ்தானத்தின் கீழ் மண்ணால் ஆன அம்மனின் சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு மேல் புதிய அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar