Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஞான சரஸ்வதி
  தீர்த்தம்: கோதாவரி நதி
  ஊர்: பஸாரா
  மாவட்டம்: ஆதிலாபாத்
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
 திருவிழா:
     
  நவராத்திரி, வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜை , மகா சிவராத்திரி, மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சன்னதியில் ஆலயப் பிரகாரத்தில் வீற்றிருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 4 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில், பஸாரா, ஆதிலாபாத், ஆந்திர மாநிலம்.  
   
போன்:
   
  +91 48752-243503, 243 550 
    
 பொது தகவல்:
     
  ஆலயத்தின் முன்புள்ள மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி கொடி மரத்தைத் தரிசித்துவிட்டு உள்ளே நுழையும்போது, அங்கு சூர்யேஸ்வரசுவாமி சிவலிங்க ரூபத்தில் உள்ளார். இந்த லிங்கத்தின்மேல் தினமும் சூரிய கிரகணங்கள் படுவதாலேயே சூரியன் வழிபடும் சிவபெருமான் என்ற பொருளில் இவருக்கு ஸ்ரீ சூர்யேஸ்வர சுவாமி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த பஸாரா ஆலயத்தைச் சுற்றி எட்டு புனித தீர்த்தங்கள் உள்ளன. அவை இந்திர, சூர்ய, வியாச, வால்மீகி, விஷ்ணு, விநாயக, புத்ர, சிவ தீர்த்தங்களாகும். வால்மீகி முனிவர் இத்தலத்து சரஸ்வதிதேவியை வழிபட்ட பின்னரே இராமாயணத்தை எழுத ஆரம்பித்தாராம். ஆலயத்தில் வால்மீகி முனிவரின் சன்னதியும் அருகில் அவரது சமாதியும் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தைகள் கல்வியை ஆரம்பிக்கும் முன் இங்குள்ள ஞான சரஸ்வதியை வழிபட்டு விட்டு செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து வெண் பட்டு உடுத்தி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்த ஆலயத்தில் முப்பெரும் தேவியர் இருப்பினும், இங்கு முக்கியமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதிதேவியே! இவளை வணங்க கல்வியும் ஞானமும் கைகூடுமென்று பக்தர்கள் நம்புகின்றனர். எப்பொழுதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதி தேவி சிலையில் உள்ள மஞ்சளே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைச் சிறிதளவு எடுத்து உண்டால் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

வியாச முனிவருக்கு முதன்முதலில் தேவி முப்பெருந்தேவியரின் அம்சமாகக் காட்சிகொடுத்து குமராஞ்சலா மலைப்பகுதியில் தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதிதேவிக்கு கௌமாராச்சல நிவாசினி என்னும் திருநாமமும் உண்டு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த திவ்ய தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பிக்க அதிக அளவில் மக்கள் வந்து கூடுகின்றனர். குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளன்று இந்த ஆலயம் விழாக்கோலம் பூணுகிறது. பக்தர்கள் சரஸ்வதிதேவியை வழிபட்டுவிட்டு வியாச முனிவர் தவம் செய்த குகையிலுள்ள வியாச பகவானையும் வழிபட்டுச் செல்கின்றனர். இவரை வழிபட புண்ணிய பலன்கள் கிட்டும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே பரவியுள்ளது.

இந்த ஊரில் தத்தாத்ரேயருக்கு ஆலயம் இருப்பதால், பஸாரா கிராமம் தத்ததாம் எனப்படும் தத்தாத்ரேயர் தலமாகவும் கருதப்படுகிறது. சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ந்ருஸிம்ம பாரதி (14-ஆம் நூற்றாண்டு) சுவாமிகள் பாத யாத்திரையாக இங்கு வந்த போது தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்தாராம். இந்த தத்தாத்ரேயரை வணங்க ஞானம் கைகூடுமென்று நம்பப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  புராண காலத்தில் வேதவியாச மகரிஷி கோதாவரி நதி தீரத்துக்கு வந்து தவம் செய்துகொண்டிருந்தபோது, சரஸ்வதிதேவி அவர்முன் தோன்றி, முப்பெரும் தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதிக்கு ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டாளாம். அதன்படி வியாசர் மூன்று சிலைகள் அமைத்துப் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. முதலில் அவர் பெயராலேயே வியாசபுரி என்று வழங்கப்பட்டு, பின்னர் வஸாரா என்று மாறி தற்போது பஸாரா என்று அழைக்கப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சன்னதியில் ஆலயப் பிரகாரத்தில் வீற்றிருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar