Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சபாபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சபாபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நடராஜர்
  ஊர்: பவர்ஹவுஸ் ரோடு
  மாவட்டம்: திருவனந்தபுரம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம்.  
     
 தல சிறப்பு:
     
  நடராஜரை தட்சிணாமூர்த்தியாகக் கருதி இங்கு வழிபடுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சபாபதி திருக்கோயில் பவர்ஹவுஸ் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் அருகில் திருவனந்தபுரம், கேரளா.  
   
போன்:
   
  +91 471- 2231 5156, 94466-15928. 
    
 பொது தகவல்:
     
  நடராஜருக்கு நேர் எதிரில் ஒரு பர்லாங் தூரத்தில் உஜ்ஜையினி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, குழந்தைகள் கல்வி மேம்பாடு, சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்காக மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். மஞ்ச சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யமும் உண்டு. 
    
 தலபெருமை:
     
  திருவாதிரை களி வழிபாடு: திருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, குழந்தைகள் கல்வி மேம்பாடு, சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்காக மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். மஞ்ச சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யமும் உண்டு.  திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடு செய்து களி தானம் செய்தால் செல்வ வளம் பெறலாம் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்: ஆனந்த தாண்டவத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திங்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்துகின்றனர். (கேரள மக்கள் நடராஜரை தட்சிணாமூர்த்தியாகவும் கருதுகின்றனர்) சிவலிங்கத்துக்கு செய்வது போல், நடராஜர் சிலை மேல், தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடும் நடக்கிறது. இந்த வழிபாடு எமபயம் நீக்கும் என்கிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  மூலம் திருநாள் மகாராஜா காலத்தில், இங்குள்ள பத்மநாப சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. நந்தவனம் அமைந்த இடத்தில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலை கொண்ட கோயில் இருந்தது. ஆனால், அங்கே பூஜை எதுவும் நடக்கவில்லை. காலப்போக்கில், நந்தவனத்தைச் சுற்றி குடியிருப்புகளும், கடைகளும் வரத் துவங்கின. அதே நேரம், அங்கே குடியிருந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு வகையில் சோதனை ஏற்பட்டது. தேவ பிரசன்னம் பார்த்ததில், நடராஜர் கோயிலில் பூஜை நடக்காததும், நடராஜர் கோயில் எதிரில் அரை கி.மீ., தூரத்தில் இருந்த முத்தாரம்மன் கோயில் நேர் பார்வையில் இருந்ததுமே பிரச்னைக்கு காரணங்கள். இந்த கோயில்களுக்கு நடுவில் அட்சயபாத்திரத்துடன் அம்பாள் பிரதிஷ்டை செய்தால் பிரச்னைக் தீர்வு கிடைக்கும் என்று பிரசன்னத்தில் கூறப்பட்டது. அதன்படி நடராஜருக்கு நேர் எதிரில் ஒரு பர்லாங் தூரத்தில் உஜ்ஜையினி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன்பிறகு அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. நடராஜர் கோயிலில் பூஜைகளும் ஆரம்பித்தன.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நடராஜரை தட்சிணாமூர்த்தியாகக் கருதி இங்கு வழிபடுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar