Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முர்டேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முர்டேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முர்டேஸ்வரர்
  ஊர்: பாட்கால்
  மாவட்டம்: உத்தர் கன்னடா
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  தை ஒன்றாம் தேதி துவங்கி எட்டு நாள் பிரம்மோற்ஸவம், தேரோட்டம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம்.  
     
 தல சிறப்பு:
     
  123 அடி உயரத்தில் சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முர்டேஸ்வரர் திருக்கோயில், பாட்கால், உத்தர கன்னடா, கர்நாடகா மாநிலம்.  
   
போன்:
   
  +91 8385 268 524, 290 169 
    
 பொது தகவல்:
     
  கணபதி, ஆஞ்சநேயர், நாகர், சுப்பிரமணியர், நவக்கிரகம், தத்தாத்ரேயர் சன்னதிகள் உள்ளன. ராட்சத சிவன் சிலையின் கீழ் மற்றொரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவபார்வதியை ராமர், சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் பூஜிப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. பயணிகளை படகுகளில் கடலுக்கு சுற்றுலாவும் அழைத்து செல்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும் 108 கலச அபிஷேகம் செய்யப்படுகிறது. எமபயம் நீங்க சுவாமிக்கும்,பார்வதி அம்பாளுக்கும் ருத்ராபிஷேகம் செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு நைவேத்யமாக எள், நெய், வெல்லம், பச்சைப்பயறு பொடி, ஏலக்காய் சேர்த்த பஞ்ச கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்படுகிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகர் சன்னதியில் பாக்குப் பூ செலுத்தி பரிகாரம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும் 108 கலச அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்களை குடும்பத்துடன் மண்டபத்தில் அமரவைத்து சர்வதேவ பூஜை என்னும் தோஷம் நீக்கும் பூஜை நடத்துகின்றனர். இந்த பூஜையில் சுவாமிக்கு நைவேத்யமாக எள், நெய், வெல்லம், பச்சைப்பயறு பொடி, ஏலக்காய் சேர்த்த பஞ்ச கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்படுகிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகர் சன்னதியில் பாக்குப் பூ செலுத்தி பரிகாரம் செய்கின்றனர். எமபயம் நீங்க சுவாமிக்கும், பார்வதி அம்பாளுக்கும் ருத்ராபிஷேகம் செய்கின்றனர்.

விளக்கில் முகம் பார்த்தல்:
முர்டேஸ்வரர் சன்னதியில் அணையா விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் ஊற்றி, காசு போட்டுபக்தர்கள் தங்கள் முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர். இவ்வாறு செய்தால் செல்வவிருத்தி உண்டாகும் என நம்புகின்றனர்.

இரண்டாவது பெரிய சிவன்: இந்தக் கோயிலில் 20 நிலைகளும், 237.5 அடி உயரமும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு அடி உயரத்தில் மூலவர் முர்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஆனால், கோயில் பின்புறம் 123 அடி உயரத்தில் சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை. இதன் எதிரில் ராட்சத நந்தி உள்ளது. (நேபாளத்தில் 143 அடி உயரத்தில் கைலாஷ்நாத் மகாதேவர் சிலை உலகிலேயே பெரிய சிவன் சிலை) ராவணன், கணபதியிடம் லிங்கத்தை வழங்குவது, சித்தர்கள் தவக்காட்சி, கைலாயத்தில் சிவன், கீதா உபதேசம், சூரியபகவான் சிலைகளும் காணப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  பிராணலிங்கம் ஒன்றை இலங்கைக்கு கொண்டு செல்ல, கயிலைமலையில் ராவணன் தவமிருந்தான். அதைக் கொண்டு சென்றால் தேவர்கள் செயலிழப்பர் என்பதால், நாரதர் இந்திரனிடம் முறையிட்டார். இந்திரன் இதுபற்றி சிவனிடம் முறையிடச் சென்றான். அதற்குள், ராவணன் அந்த லிங்கத்தை சிவனிடம் பெற்று விட்டான். ராவணா, இந்த லிங்கத்தை தரையில் வைக்க கூடாது, வைத்தால் எடுக்க முடியாது, நேராக இலங்கை கொண்டு செல், என்று நிபந்தனை விதித்தார். ஆனால், லிங்கத்தை கைப்பற்ற விஷ்ணு முடிவு செய்தார். ராவணன் சந்தியாவந்தனம் (மாலை நேர வழிபாடு) செய்யத் தவறமாட்டான் என்பது அவருக்கு தெரியும். இதைப் பயன்படுத்தி, அவன் இலங்கை சென்று சேர்வதற்குள் தன் சக்கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். இதையடுத்து இருள் கவ்வியது. அந்த இருளை மாலை நேரமென நம்பி, சந்தியாவந்தனம் செய்ய முடிவு செய்தான் ராவணன். இதனிடைய விநாயகர் அங்கு பிரம்மச்சாரி வேடத்தில் வந்தார். அவரிடம், இந்த லிங்கத்தை கையில் வைத்துக் கொள். நான் சந்தியாவந்தனம் செய்யும் வரை கீழே வைத்துவிடாதே, என்றான். ஐயா! லிங்கத்தின் பாரம் தாங்க முடியவிட்டால் மூன்று முறை அழைப்பேன், நீர் வராவிட்டால், லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன், என்றார் விநாயகர். ராவணன் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் பிராணலிங்கத்தின் மீது செலுத்தினர். பாரம் தாங்க முடியாத கணபதி, மூன்று முறை ராவணனை அழைத்தார். ராவணன் வராததால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். ஆத்திரமடைந்த ராவணன் கணபதியின் தலையில் ஓங்கி குட்டினான். கீழே வைக்கப்பட்ட லிங்கத்தை 20 கைகளாலும் எடுக்க முயன்றான். அவன் தூக்கிய வேகத்தில் நான்கு துண்டுகளாக உடைந்து நான்கு இடங்களில் விழுந்தது. அதில் ஒரு இடம் தான் முர்டேஸ்வரா. இங்கு சிவாலயம் எழுப்பப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 123 அடி உயரத்தில் சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar