அருள்மிகு ஆதிநாயகி திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ஆதிநாயகி |
|
தல விருட்சம் | : |
வேம்பு, வில்வம் |
|
ஊர் | : |
இளையனார் வேலூர் |
|
மாவட்டம் | : |
காஞ்சிபுரம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், நவராத்திரி. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
அம்பாள் தன் இரு கைகளாலும் சின்முத்திரை காட்டுவது சிறப்பாகும். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு ஆதிநாயகி திருக்கோயில்
இளையனார் வேலூர், வாலாஜாபாத் வழி,
காஞ்சிபுரம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 90927 82267, 97887 94776, 044- 272 25267, 97888 96462, 76393 70883 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
ஆதிமிகி, ஆதிவிகி என்னும் துவாரபாலகிகளும், கருப்பண்ணசாமியும் கோயிலைக் காவல் புரிகின்றனர். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
கடன்தொல்லை நீங்கி செல்வவளம் பெருகவும், குழந்தை பாக்கியம், திருமண தோஷம் நீங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
வளையல் மாலை செலுத்தினால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து பொங்கல் படைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். கேரளா பாணியில் பால்பாயாசம் படைத்து வழிபடுவது கோயிலின் சிறப்பு. | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
வடக்குநோக்கி காட்சி தரும் இவள் தன் இரு கைகளாலும் சின்முத்திரை காட்டுவது சிறப்பாகும். அம்பிகையின் பின்புறம் ஆதிரூபிணியாக மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். தலவிருட்சம் வேம்பு, வில்வம். ஆதி ஜடாமுடி சித்தரின் வழிகாட்டுதல்படி பூஜைமுறைகள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. கேரளா கொடுங்கலூர் தலத்திலும் ஆதி பகவதி அம்மனை (கண்ணகி வடிவமாக) வழிபடுகின்றனர். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
பழங்காலத்தில் செய்யாற்றங்கரையில் வழிபாடு செய்யப்பட்ட இந்த அம்மன், வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு புதைந்து போனது. சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் ஒரு முதியவர் கனவில் தோன்றி நான் முற்காலத்தில் இளையனார் வேலூர் என்று அழைக்கப்படும் இந்த சிற்றூரில் ஆதிபகவதியாக என்னை வழிபட்டதாகவும், இயற்கை சீற்றத்தால் சிதையுண்டேன் என்றும் அருள்வாக்கு கூறினார். அம்மன் அருள்வாக்குபடி அந்த முதியவர் அவரது தோற்றத்தில் அம்பிகையை நிறுவி வழிபட்டுவந்தனர். ஆதிபகவதி என்று அழைக்கப்பட்ட அம்பாள் பிற்காலத்தில் பெயர் மறுவி ஆதிநாயகி என்று அழைக்கப்படுகிறது. செய்யாற்றங்கரையில் இளையானார் வேலூரில் ஆதிநாயகி அம்பாள் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு தன் இரு கரங்களிலும் சின் முத்திரை வைத்துக்கொண்டு அருள்பாலிப்பது சிறப்பாகும். அம்பிகையின் வலதுபுறம் ஆதிரூபிணியாக மகாலக்ஷ்மி வீற்றிருக்கிறாள். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
அம்பாள் தன் இரு கைகளாலும் சின்முத்திரை காட்டுவது சிறப்பாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|