|
தனலட்சுமி கிழக்கு நோக்கி, தான்யலட்சுமி மேற்கு நோக்கி, கஜலட்சுமி தெற்கு நோக்கி, ஆதி லட்சுமி வடக்கு நோக்கி, கஜலட்சுமி தெற்கு நோக்கி, ஆதிலட்சுமி வடக்கு நோக்கி அமைந்துள்ளனர். வடமேற்கு மூலை நோக்கி ஐஸ்வர்ய லட்சுமியும், வடகிழக்கு மூலை பார்த்து விஜயலட்சுமியும், தென்கிழக்கு மூலை நோக்கி வீரலட்சுமியும், தென்மேற்கு மூலை பார்த்து சந்தானலட்சுமியும் அமைந்துள்ளனர். அனைவரையும் ஈர்க்கும் விதமாக கண்ணாடிக் கதவுகளடங்கிய தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்
கருவறையின் தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி. முன்புறம் சக்கரத்தாழ்வாரும். பின்புறம் யோக நரசிம்மரும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு மூலையில் விநாயகர் தும்பிக்கையாழ்வாராக சங்கு சக்கரம் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார். பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஐயப்பன் சன்னிதி. உள்ளே, பளிங்குச் சிலையாக சுவாமி ஐயப்பன்.
இருபுறமும் துவார பாலகர்கள் நின்றிருக்க அமைந்துள்ள கருவறை, லட்சுமி நாராயணப் பெருமாள் தேவியை தன் மடியில் அமர்த்தியபடி பக்தர்களுக்கு காட்சி அருள்கிறார். ஒரே சன்னிதியில் லட்சுமி நாராயணராக இங்கு காட்சியளிப்பது தனிச் சிறப்பு. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக பல தடங்கல்களையும் தாண்டி, கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் மிகக் கம்பீரமாக எழுந்துள்ளது பெருமாள் கோயில். |
|