எழிலான ஐந்து நிலை ராஜகோபுரத்தின் முன் உள்ள மண்டபத்தின் தெற்கே ரங்கநாதன் பள்ளி கொண்டுள்ளார். வடக்கே நர்த்தன கிருஷ்ணர் ஆடுகிறார்.கிழக்கில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களோடு காட்சிதரும் நரசிம்மரின் மேலிரு கரங்கள் சங்கு சக்கரம் தாங்கியிருக்க,வலது கீழ்கரம் அபயமுத்திரை காட்டுகிறது. இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியை அணைத்தபடி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பதினொரு ஆழ்வார்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் உள்ளன. கண்ணாடி மாளிகை அற்புதமாக இருக்கிறது.
பிரார்த்தனை
இங்குள்ள பிரார்த்தனை சக்கரத்தின் மீது பக்தர்கள் கைகளை வைத்து வணங்கி நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள நரசிம்மருக்கும், கிருஷ்ணருக்கும் வெண்ணெய், புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
காலப்போக்கில் பூமியில் புதையுண்டது. 1975ல் இங்கு ஒரு கிருஷ்ணர் கோயில் கட்ட பிரசன்னம் பார்க்கப்பட்டது. அந்த இடத்தின் கீழ் ஒரு ஆலயம் புதைந்துள்ளது தெரியவந்தது. இங்குவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. அத்துடன், 1500 ஆண்டுக்கு முந்திய பல்லவர் காலத்திய நரசிம்மர் ஆலயம் இருந்தது உறுதியானதுஅதன் பின்னர் கிருஷ்ண பக்த ஜனசபா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரும், நரசிம்மரும் இணைந்து வந்ததால், லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில் என பெயரிடப்பட்டது.
தல வரலாறு:
பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது, அது பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும்படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த அத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என திரிந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி யோக நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : சென்னை-தாம்பரம் ரயில் மார்க்கத்தில், பழவந்தாங்கல் ரயில் ஸ்டேஷனில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள எம்.எம்.டி.சி., காலனியில் உள்ளது. அருகில் ஏழுர் அம்மன் கோயில்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம், சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060