Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அய்யனார்
  அம்மன்/தாயார்: பூரணா புஷ்கலை
  ஊர்: தென்னம்பாக்கம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அய்யனார் திருக்கோயில் தென்னம்பாக்கம், கடலூர்.  
   
    
 பொது தகவல்:
     
  இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண வரம் வேண்டியும், பள்ளி கல்லூரிகளுக்கு இடம் கிடைக்கவும், சொந்த வீடு கட்ட தடையுள்ளவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைக்கு உரிய உருவ பொம்மைகளை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இக்கோயிலில் முத்தையனார் பூரணா, புஷ்கலையோடு இணைந்து காட்சிதரும் கோலம் மனதிற்கு மிகவும் ரம்மியமாகவும், பக்தியை நம் உள்ளத்துக்குள் ஊடுருவ வைப்பதாகவும் இருக்கிறது. இங்கே புஷ்கலையை பொற்சிலை என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த தெய்வங்களுக்கு வலது புறம் வீரபத்திர சுவாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் ஒரு சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவரை அழகர் சித்தர் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இவர் இங்குள்ள கிணற்றினுள் சென்று அப்படியே மாயமாகிவிட்டாராம். அக்கிணறு இன்றும் ஒரு கோயிலைப் பராமரிப்பதுபோல பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிணற்றின் மேலே பித்தளையால் செய்யப்பட்ட செவ்வக வடிவ மூடி போடப்பட்டுள்ளது. தினமும் இதன்மீது விபூதிப்பட்டை போடப்படுகிறது. இதன் மத்தியப் பகுதியில் இடப்படும் விபூதி மட்டும் எத்தனை வெய்யில் அடித்தாலும் காய்வதே இல்லை. இத்தனைக்கும் கூரைப் பகுதியில் மூன்றடி இடைவெளியில் வெளிச்சம் மற்றும் வெய்யில் படுகிறது. அந்த இடைவெளியை யாராவது மூடினால் மூடியவர்களுக்கு தீங்கு நேரிடும் என்று நம்பப்படுகிறது.

சித்தரின் சமாதி அருகே விநாயகர் சிலை மட்டும் உள்ளது. முத்தையனார் கோயிலின் பின்பக்கம் உள்ள இந்த ஜீவசமாதியை தரிசித்து வேண்டிக்கொண்டால் முத்தையனாரின் அருளோடு, அழகர் சித்தரின் திருவருளும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் பக்தர்கள். மேலும் இங்கே லிங்க வடிவில் சிவபெருமானும் அருள்புரிகிறார். அழகு முத்தையனார் கோயில் என்னும் பெயருக்கேற்ப, இப்பகுதி அடர்ந்த மரங்கள் சூழ்ந்து, பசுமையுடனும் அமைதியுடனும் திகழ்கிறது. இங்கு சென்று அய்யனார் அருளையும் அழகர் சித்தரின் அருளையும் பெறலாம். இங்கே அய்யனார் அழகு முத்தையனார் என்று அழைக்கப்படுகிறார். நமது வேண்டுதல்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து முத்தையனாரின் கையில் மஞ்சள் நூலில் கட்டி விட்டு மனதார வணங்கவேண்டும், நாம் எழுதிய விண்ணப்பங்களை முத்தையனாரால் பரிசீலிக்கப்பட்டு பலனும் அருளப்படும் நம்பிக்கையோடு இங்கே விண்ணப்பித்தவர்களின் தேவைகள் நிறைவேறியுள்ளன. முத்தையனாரின் கையில் பல்லாயிரக்கணக்கான வேண்டுதல் கடிதங்கள் கட்டப்பட்டுள்ளன. நமது வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் பொம்மைகளைச் செய்து வைப்பது ஐதீகமாக உள்ளது.

 
     
  தல வரலாறு:
     
 

சிவன்- விஷ்ணுவிற்கு (விஷ்ணுவின் மோகினி அவதாரம் மூலமாக) கையில் கிடைத்த அய்யனார் எனும் குழந்தையை, ஒரு முனிவர் வளர்த்து வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அய்யனார் குழந்தைப் பருவத்தில் அழகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார். சிவ-விஷ்ணு திருவிளையாடல் நிகழ்ந்தது கீழப்புதுப்பட்டு என்றபோதும், அய்யனார் வளர்ந்தது தென்னம்பாக்கம் பகுதியில்தான். சிவனும், விஷ்ணுவும் இப்பகுதியில் வாழ்ந்த முனிவரிடம் அய்யனாரை வளர்ப்பதற்காக ஒப்படைத்தனராம். முனிவரும் அய்யனாரை வளர்ந்து வந்தார். அவருக்கு பூரணா புஷ்கலை எனும் இரண்டு மகள்கள் இருந்தனர். அய்யனார் மிகவும் வீரனாகவும் திரனாகவும் வளர்ந்து வந்தார்.

அப்போது ஒரு மந்திரவாதி மந்திரக்கட்டு எனும் மோடி வித்தை மூலம். அப்பகுதியின் சுற்றுப்புறத்திலிருந்த சில சிற்றரசர்களை சிறைப்பிடித்து வசப்படுத்தி வைத்திருந்தான். அவனது மந்திர வித்தை அனைவரையும் சிறைப்படுத்தும் அளவு விபரீதமாக இருந்தது. எனவே மக்கள் முனிவரிடம் முறையிட்டனர். அவர் அய்யனாரை அழைத்து, நீ போய் அந்த மந்திரவாதியின் கொட்டத்தை அடக்கி, சிற்றரசர்களைக் காப்பாற்று. ஊர் மக்களின் அச்சம்போக்கு என்று கூற, அய்யனார் அந்த வலிமை மிக்க மந்திரவாதியுடன் மோதி, அவனை அழித்து, சிற்றரசர்களை சிறையிலிருந்து மீட்டார். இதனால் ஊர் மக்களும் பயம் நீங்கி சந்தோஷப்பட்டனர். அய்யனாரின் வீரத்தை மெச்சிய முனிவர், உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். அதற்கு அய்யனார் பூரணா புஷ்கலையை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். மேலும் என்னைவிட பலசாலியான-மற்றும் என்னைவிட வயதில் பெரியவரான ஒருவரை எனக்கு காவலாளியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முனிவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார். என் மக்கள் இருவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வரக்கூடாது. அவர்கள் இருவரையும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சம்மதித்தார். அய்யனாரும் சத்தியவாக்கு கொடுத்து பூரணா, புஷ்கலையை திருமணம் செய்துகொண்டார். சொன்ன சொல் மாறாமல் இருவரையும் கண் கலங்காமல் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டார். அய்யனார் கேட்டுக்கொண்டபடி வீரபத்திரை காவலாளியாக நியமித்தார் முனிவர். ஒரு நாள் அய்யனார் புஷ்கலையுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பூரணா, தன் சகோதரியும் கணவரும் அந்தரங்கமாக இருப்பதால், அதற்கு இடையூராக இருக்கவேண்டாம் என நினைத்து சற்று தள்ளிச் சென்று ஈரமான தன் கூந்தலை விரித்துப்போட்டு ஆற்றிக் கொண்டிருந்தாள் தூரத்தில் இருந்து இதைப் பார்த்த முனிவர், தன் மகள் பூரணா அழுகிறாள் என நினைத்தார். மிகுந்த கோபம் கொண்ட அவர், உனக்கு அடுத்த பிறவியில் திருமணமே நடக்காது என்ற அய்யனாருக்கு சாபமிட்டார். எனவேதான் அடுத்த பிறவியில் மணிகண்டனாகப் பிறந்த அய்யனாருக்குத் திருமணமாக வில்லை என்று கூறப்படுகிறது.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar