Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: செல்லாண்டியம்மன்
  உற்சவர்: செல்லாண்டியம்மன், காளி
  தல விருட்சம்: வில்வம்
  ஊர்: திருப்பூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி மாதம், தேய்பிறை அஷ்டமி, நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  அம்மனுக்கு வாகனமாக யாழி அமைந்திருப்பதும், அம்மன் வடக்கு நோக்கியும், பேச்சியம்மன் மேற்கு நோக்கியும் காட்சியளிப்பதும் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி 12 முதல் மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் 108, நொய்யல் நதிக்கரை, வளம் பாலம் அருகில், திருப்பூர்.  
   
போன்:
   
  +91 97511 40515 
    
 பொது தகவல்:
     
  அம்மன் வடக்கு நோக்கியும்; பேச்சியம்மன் மேற்கு நோக்கியும் ; பிரகாரத்தின் கன்னிமூலையில் கன்னிமார்; கிழக்குநோக்கி முருகன், அரசமரத்தடியில் விநாயகர், தெற்கு திசையில் தட்சணாமூர்த்தி, ரிஷப வாகனத்தில் சிவன், அம்மனின் முன்புறத்தில் கட்டளைக்காக நீலிதேவி, நீலிகண்டி. மகாமுனி, முத்தையன், கருப்பராயன், முனிஸ்வரன், கிருஷ்ணம்மாள், கிருஷ்ண அய்யர், பழைய சிலையாக அம்மையப்பன் (சிவன், பார்வதி), மகேஷ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, அரசமரத்தடியில் ராகு-கேது ஆகிய சுவாமிகளும் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்க, குழந்தை வரம் வேண்டி, குடும்ப கஷ்டம் தீர, வியாபார விருத்தி அடைய, பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் சரியாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பால் குடம் எடுத்தும், குண்டம் இறங்கியும், அம்பாளுக்கு பட்டுபுடவை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் முன்பகுதியில் காஞ்சிமா நதி (நொய்யல்) ஒடிக்கொண்டிருக்கிறது.  1945 முதல் 1970 வரை ஆற்றில் சுத்தமான நீர் ஒடியதாகவும், அந்த நீரை எடுத்து அம்மனுக்கு,  பூஜை நடைபெற்றதாகவும் ஐதீகம். கோயில் கட்டிய காலத்தில் இருந்து நொய்யல் நதிக்கரையில் 16 அடி பாம்பு இருப்பதாக நம்பப்படுகிறது.  இந்த பாம்பு வருடத்தில் ஒருமுறை, அம்மனுக்கு குண்டம் திருவிழா நடக்கும் போது, நடுநிசியில்  குண்டம் வளர்த்திய பிறகு (தீ பற்ற வைத்த பின்) குண்டத்தின் மேல் சென்று வருவதாக கூறப்படுகிறது.  இன்று வரை இது தொடர்ச்சியாக நடப்பதாக, இப்பகுதியினர் நம்புகின்றனர்.

நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவர், சிறப்பு அலங்காரமின்றி சாதாரண தோற்றத்துடன் (இரவு காவலர் போல) சிங்க வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகளில் சுற்றி வருகிறாள். அவள் வந்த சென்ற பின், தேர் திருவிழா கமிட்டியினர் செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனிடம் உத்தரவு பெற்று வந்து பிறகு தான், கோயிலில் கொடியேற்ற நிகழ்வுகள் துவங்கப்படுகிறது. அம்மன் காவல் தெய்வம் என்பதால், தேர் வீதிகளில் வலம் வந்து, துர்சக்திகளை விரட்டிய பிறகு தான், கொடியேற்றத்துக்கு செல்லாண்டியம்மன் உத்தரவு வழங்குகிறாள். ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கொடிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கடைசி செவ்வாய் குண்டம்  திருவிழா நடக்கிறது.  சுற்றிலும் மயானம் நடுவே (காளியின் அம்சமாக) அம்மன் விற்றிருப்பதால், சாபம் தீர்ப்பவளாக கருதப்படுகிறாள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்தில் பங்கேற்று, உணவு அருந்துபவர்கள், தங்கள் முன்னோர், வேண்டாதோரிடம் பெற்ற சாபங்கள், பழிச்சொற்கள் போய் விடும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமியன்று கருப்பராயனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு பாதகொறடு (ஆணிச்செருப்பு)அணிந்து குறி சொல்லும் பழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் குண்டம் முடிந்த பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை பேச்சியம்மனுக்கு சினைஆடு அறுக்கும் பழக்கம் உள்ளது. பேச்சியம்மன் முன் 108 படையல் போட்டு, விசேஷ பூஜை ஒன்றை நடத்தி சினை ஆட்டை அறுத்து, அப்படியே சாமிக்கு படைக்கின்றனர். இந்த பூஜையில், இதன் பிறகு நடக்கும் விருந்தில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலனோர், கல்யாணம் ஆன பின் பிள்ளை வரம் கிடைக்காதவர்களாக இருக்கின்றனர்.

அம்மன் சாந்தமான உருவமாக இல்லாமல் எதிரில் மயானம், பின்புறம் மயானம் என மாயனத்தை சுற்றி  எட்டு கைகளில் ஆயுதங்களுடன் காளியாக இருக்கிறாள். யாழி (சிதைக்கப்பட்ட சிங்கத்தின் முகம்)  அம்மனுக்கு வாகனமாக இங்கு மட்டுமே உள்ளது. 1863ல், ஜூலை மாதம் இக்கோயில் கட்டப்பட்டது.  கடந்த 2005ம் ஆண்டு முதல் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. சிதிலமடைந்த கோயில் 2006ல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
 
     
  தல வரலாறு:
     
  பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் திருப்போரில் (திருப்பூரில்) இருந்து திருவுடையூருக்கு  (தாராபுரம்) தேன் அழிக்க, முயல்களை வேட்டையாட சிலர் சென்றுள்ளனர். வரும் வழியில் வீடு கட்டுவதற்கு கல் எடுத்து வந்துள்ளனர். அவர்கள் வந்த நேரத்தில் பெரிய மழை பெய்து, காஞ்சிமா நதியில் (நொய்யல்நதியில்) வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் கல்லை கொண்டு போக முடியாது என நினைத்தவர்கள் கரையில் வைத்து விட்டு, மீதமிருந்த இரண்டு கல்லை எடுத்து கொண்டு சென்றனர். ஒரு கல்லை வடக்கு புறம் இருந்த காட்டில் போட்டு விட்டனர். தற்போது அமைந்திருக்கும் பிச்சம்பாளையம்  மாரியம்மன் கோயில். இன்னொரு கல் பி.என்., ரோட்டில் அமைந்திருக்கும் முனியப்பன்  கோயில். இவர்கள் அடுத்த நாள் வெள்ளம் குறைந்த பிறகு ஆற்றை கடந்து கல்லை எடுத்துள்ளனர். தூக்க முடியாத கணமுடன் கல் இருந்தது.  திடீரென அங்கு தோன்றிய அம்மன், எங்கோ இருந்த என்னை இங்கு கொண்டு வந்து விட்டீர்கள்.  என்னை விட்டுவிடுங்கள். நான் இனி திருப்போரில் (திருப்பூரில்) இருந்து விடுகிறேன் என  கூறியதாகவும், அதன் பின் கல்லை (தோன்றிய அம்மனை) மக்கள் வீட்டுச் சென்றதாகவும்  வரலாறு கூறுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனுக்கு வாகனமாக யாழி அமைந்திருப்பதும், அம்மன் வடக்கு நோக்கியும், பேச்சியம்மன் மேற்கு நோக்கியும் காட்சியளிப்பதும் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar