Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அங்காள பரமேஸ்வரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: முடிகொண்டான் ஆற்றுத்தீர்த்தம்
  ஊர்: அச்சுதம்பேட்டை
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, ஆடிவெள்ளி, மாதந்தோறும் அமாவாசை ஹோமம்  
     
 தல சிறப்பு:
     
  வேளுக்குடி அங்காள பரமேஸ்வரியின் தங்கையாக பாவித்த கோயில் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் அச்சுதம்பேட்டை, சன்னாநல்லூர் அஞ்சல், நன்னிலம் தாலுகா, திருவாரூர்.  
   
போன்:
   
  +91 9842537097 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் மகாமண்டபம், கிழக்கு நோக்கிய வலம்புரி குபேர விநாயகர், தண்டாயுதபாணி, பத்ரகாளியுடன் அகோரவீரபத்திரர், பேச்சியம்மன், காட்டேரி, பாவாடைராயன், வீரன், இருளேஸ்வரர், பலி பீடம், நந்தி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் லாடேஸ்வர முனிவர் தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தீராத நோய் நீங்கவும், பில்லி சூன்யம், ஏவல் செய்வினை தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  கால்நடைகள் உயிருடன் (ஆடு, கோழி, புறா) படைத்தும், அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  மன்னார்குடி சாலையில் உள்ள வேளுக்குடியில் கோயில் கொண்ட பின் அப்பகுதியில் இருந்து வேள்வி செய்து உத்தரவு பெற்று தங்கையாக பாவித்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.  வடமேற்கே கல்வித்தாய் கூத்தனூர் சரஸ்வதியும், தெற்கே தியாகேசனுக்கும் இடையில் இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. பல்வேறு பகுதியிலிருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  மிகவும் பழமையான கோயில் (ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்ச யாகபரணி நிகழ்வை கூறும் கோயில்) ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்சயாகபரணி நிகழ்வை மையக் கருத்தை முன் வைத்து கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தக்கன் தான், நடத்திய வேள்வியில்  திருமால், பிரம்மன், அக்கினி, இந்திரன், சூரியன் உள்ளிட்டவர்களை அழைத்தவர். ஈசனை அழைக்கவில்லை. இதை அறிந்த பார்வதி தன்,  தந்தை நடத்தும் வேள்விக்கு சென்று வரவும் ஈசனை அழைக்காமல் வேள்ளி நடத்தியது தவறு என்பதை சுட்டிக்காட்டவும்  ஈசனிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு ஈசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் செய்து, ஈசன் அனுமதியில்லாமல், அவர் வார்த்தையை மீறி வேள்வி நடக்கும் இடத்திற்கு பார்வதி சென்றார். அங்கு அவர் தந்தையால் புறக்கணிக்கப்பட்டார். மேலும் தன் கணவரான ஈசனை அழைக்காமல் நடத்திய வேள்வியை அழியட்டும் என சாபமிட்டு  விட்டு சிவபெருமானிடம் சென்றபோது, ஈசன் பார்வதி மேல் கோபப்படுகிறார். இதனால் பெண் புத்தி பின் புத்தி என்பதை உணர்ந்தேன் மன்னித்து ஏற்க வேண்டினார். மனம் குளிர்ந்த ஈசன் சோதனை நடத்தியதாக கூறி பின்னர் ஏற்றார்.

ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்சயாகபரணி நிகழ்வை மையக் கருத்தை முன் வைத்து மன்னார்குடி சாலையில உள்ள வேளுக்குடியில் கோயில் அங்காள பரமேஸ்வரிக்கு உள்ளது. இந்நிலையில் அச்சுதம்பேட்டையில் வாழ்ந்த இருளப்பன் செட்டியார் கனவில் அங்காள பரமேஸ்வரியம்மன் தோன்றி வேளுக்குடியை போன்று அங்கு கோயில் கொண்டு வழிபாடு நடத்துமாறு கூறினார். அதன் பின் வேளுக்குடி கோயிலிலிருந்து அம்மன் உத்தரவு பெற்று அவர் தங்கையாக பாவித்து கோயில் அமைத்துள்ளனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வேளுக்குடி அங்காள பரமேஸ்வரியின் தங்கையாக பாவித்த கோயில் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar