Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சமயாள்குடில் மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சமயாள்குடில் மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சமயாள்குடில் மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  புராண பெயர்: அச்சன்பற்று
  ஊர்: அச்சம்பத்து
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூச விழா, மாசிமகம், ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, பிரத்தியங்கிரா யாகம் (துர்காஷ்டமி), அஷ்டமி பூஜை, பிரதோஷ கால பூஜை, பவுர்ணமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி பூஜை.  
     
 தல சிறப்பு:
     
  கிழக்கு பார்த்து அமைந்த இக்கோயிலில் நர்த்தன விநாயகரும், புவனேஸ்வரி அம்மனும் தெற்கு பக்கமும், அம்மன் திருவடி மேற்கு பக்கமும், புவனேஸ்வரரும் ,சந்தான பரமேஸ்வரரும் வடக்கு பக்கமும், கொடிமரம், எல்லைக்காளி அம்மன், மகா நந்தி, கருப்பண சாமி, ஆகியவை கிழக்கு பக்கமும் என நாலாபக்கமும் சூழ்ந்திருக்க நடுநாயகமாக மாரியம்மன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அடிப்படையில் அருள்பாலிக்கிறாள். கண்ணகியே இங்கு மாரியம்மன் அம்சத்தில், கேட்டவருக்கு கேட்டவரம் தாயாக சமயங்களுக்கு அப்பாற்பட்டவளாக சமயாள் குடில் மாரியம்மனாக இந்த சக்தி பீடத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சமயாள்குடில் மாரியம்மன் திருக்கோயில், சந்தோஷ் நகர், தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை - 625 016.  
   
போன்:
   
  +91 452 652 0203, 92449 97731 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் ஓம் வடிவத்தில் அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணம் நடைபெறவும், ராகு, கேது தோஷ நிவர்த்தி பெற, நோயின் கடுமைகள் விலகவும் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தீரவும் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  செவ்வாய், வெள்ளி ராகு கால விளக்கு போடுதல், மாவிளக்கு போடுதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுக்கு பொறுப்பேற்றல், அன்னதானம் செய்தல், வஸ்திரம் சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பொதுவாக மாரியம்மன் என்றாலே தலைக்கு பின்புறம் அக்னி ஜுவாலையுடன் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சமயாள் குடில் மாரியம்மன் அஷ்டமா சக்திகளும் தன்னுள் அடக்கம் என்பதற்கிணங்க எட்டு திருக்கரங்களுடன் இடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்ட நிலையில் சுமார் மூன்று அடி உயரத்தில் அருள்பாலிப்பதுடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகருடன் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
  தல வரலாறு:
     
  பாண்டியநாட்டை கோச்சடை மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்த போது, அம்மன்னன் பாண்டிய நாட்டின் மேற்கு எல்லையாக விராட்டிபத்து கிராமத்தை நிறுவி, அங்கு எல்லைக் காளி கோயிலை எழுப்பியதற்கு ஆதாரமாக வீதியடைய அய்யனார் கோயிலும் முத்தையன் திருக்கோயிலும் 21 பந்தி, 61 தெய்வ நிலைகளும் விளங்கி வருகின்றன. இன்றும் நாகமலையானது தடாதகை நாச்சியார் உலவும் எல்லையாக இருந்து வருகிறது. மதுரையில் தன் கணவன் அநீதியாக கொலை செய்யப்பட்டதால் கற்புடைய தெய்வம் கண்ணகி மதுரை நகரையே எரியூட்டிய பின் தான் மலைநாடு (கேரளா) செல்லும் முன் பாண்டிய நாட்டின் மேற்கு எல்லையாகிய இந்த தலத்தில் நின்று தன் கணவனாகிய கோவலன் கொல்லப்பட்ட இடத்தையும் எரியும் மதுரை நகரையும் கண்டாள். பின்னர் சத்தியம், தர்மம் இவைகளை நிலைநாட்டும் சக்தி பீடமாக இந்த தலம் விளங்கும். சத்திய, தர்ம உண்மைகளை நிலைநிறுத்த இந்த பீடத்தில் வீற்றிருந்து நாடி வரும் அடியவர்களை சத்திய தர்ம வழிகளில் பாதுகாத்து வருவதாக மகான்கள் மகரிஷி பதஞ்சலி போன்றோரின் அருள்நிலை வாக்குச் சுவடிகள் உணர்த்துகின்றன. இந்த சிறப்பை உணர்த்த அன்னையின் அற்புதங்களை வெளிக்காட்ட சமயாள் குடில் என்ற திருப்பெயர் சூட்டி, மக்களின் குறைகளை நீக்கும் குடிலாக சமயாள் குடில் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கிழக்கு பார்த்து அமைந்த இக்கோயிலில் நர்த்தன விநாயகரும், புவனேஸ்வரி அம்மனும் தெற்கு பக்கமும், அம்மன் திருவடி மேற்கு பக்கமும், புவனேஸ்வரரும் ,சந்தான பரமேஸ்வரரும் வடக்கு பக்கமும், கொடிமரம், எல்லைக்காளி அம்மன், மகா நந்தி, கருப்பணசாமி, ஆகியவை கிழக்கு பக்கமும் என நாலாபக்கமும் சூழ்ந்திருக்க நடுநாயகமாக மாரியம்மன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அடிப்படையில் அருள்பாலிக்கிறாள். கண்ணகியே இங்கு மாரியம்மன் அம்சத்தில், கேட்டவருக்கு கேட்டவரம் தாயாக சமயங்களுக்கு அப்பாற்பட்டவளாக சமயாள் குடில் மாரியம்மனாக இந்த சக்தி பீடத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar