Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: லட்சுமி நரசிம்மர்
  ஊர்: நாமக்கல்
  மாவட்டம்: நாமக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல்.  
   
    
 பொது தகவல்:
     
  கோயில் அர்த்தமண்டபத்தில் குடவரையின் பக்கங்களில் வைகுண்டநாதர், இரண்ய சம்ஹார நரசிம்மர், மறுபுறம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாற்றி புதுவஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி. ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இக்கோயில், பிற்காலத்தில் சிற்பக் கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ மன்னர்களால் அழகுற புதுப்பிக்கப்பட்டது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜ முனிவர்களான சனக, சனந்தாக்கள் உள்ளனர். சூரிய, சந்திரர்கள் கவரி வீசுகின்றனர். வலதுபுறம் ஈஸ்வரரும், இடதுபுறம் நான்முகனும், இரண்யனை வதைத்த உக்கிரம் தணிவதற்கு வழிபடுகின்றனர். நரசிம்ம மூர்த்தியின் அபயமளிக்கும் வலது கையின் கூரிய நகங்களில் இரண்ய சம்ஹாரம் செய்த ரத்தக்கறை இன்னும் விளங்குகிறது. அன்னை மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். குடவரை கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு வலதுபுற சுவரில், கம்பத்தை பிளந்து கொண்டு, ஆக்ரோஷத்துடன் வெளிவந்து, இரண்யனை தன் மடி மீது இரு கைகளாலும் பிடித்து கிடத்திக் கொண்டு, அவன் மார்பை பிளந்தும், மற்ற நான்கு கைகளில் ஆயுதங்கள் தாங்கியும், குரூரமாக, உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி.

நாமக்கல் நகரின் நடுவில் இருநூறடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறோம். துவஜஸ்தம்பமும் பலிபீடமும் காணப்படுகின்றன. இடப்பக்கமுள்ள தனிச் சன்னிதிகளில் கிருஷ்ணர், ராமர், ராமானுஜர், போன்றோர், எழுந்தருளியுள்ளனர். எதிரே பிராகாரத்தின் மறுமுனையில் வேதாந்த தேசிகர் காணப்படுகிறார். பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடனை வணங்கியவாறு வாத்திய மண்டபம், மகா மண்டபம் கடந்து அர்த்த மண்டபத்திற்குச் செல்லலாம். மகா மண்டபத்திற்கு அருகே விஷ்வக்சேனர் தனி சன்னிதியில் காணப்படுகிறார். கருவறை மலையுடன் துவங்கி அர்த்த மண்டபத்துடன் இணைகிறது. மண்டபத் தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளைக் காண முடிகிறது. கருவறையில் அமர்ந்த நிலையில் நரசிம்மர் காட்சியளிக்கிறார். இரண்யனின் மார்பைப் பிளந்த அவரது வலது கரம் சிவப்பு வண்ணத்தைப் பெற்றுள்ளது. முன் இடது கை தொடை மீது படர்ந்துள்ளது. பின் வலது கரத்தில் சங்கும் பின் இடது கரத்தில் சக்கரமும், மேல் பகுதியில் உள்ளன. நரசிம்மரின் திருமார்பிலுள்ள மாலையில் மகாலக்ஷ்மியின் உருவம் காணப்படுகிறது.

வாத்திய மண்டபத்தின் வடக்கு வாயில் வழியாக வெளியே வந்தால் லக்ஷ்மி நாராயணரையும் தெற்கு வாயில் வழி வந்தால் நாமகிரித் தாயாரையும் தரிசிக்கலாம். நரசிம்மர் சன்னிதிக்கு எதிரே சாளரத்தின் வழியாக ஆஞ்சநேயரைக் காணலாம். ஆஞ்சநேயர், நரசிம்மர் முகத்தை நேரிடையாகக் காண அஞ்சி அவரது திருவடிகளை மட்டும் தரிசனம் செய்யும்படியாக பதினெட்டடி உயரத்தில் கோயிலை நோக்கியவாறு விஸ்வரூபத் திருக்கோலத்துடன் கை கூப்பி எழுந்தருளியுள்ளார். இரண்யனை வதம் செய்த பின் எவரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சியளித்த நரசிம்மர், பிரகலாதன் வேண்டுகோளுக்கு இணங்க சாந்தம் அடைந்த சாளக்கிராம மலையாகத் திகழ்ந்து வந்தார். சஞ்சீவி மலையை முதலில் பெயர்த்து வந்து முடிவில் திருப்பி வைத்த அனுமன் அதற்கருகே நரசிம்ம பெருமான் உருவெடுத்த சாளக்கிராம மலையின் வனப்பைக் கண்டு மயங்கி, அதைத்தூக்கிக் கொண்டு வந்தபோது, தாகம் தீர்த்துக் கொள்ள எண்ணி இந்தத் தலத்தில் இறக்கி வைத்தார். தாகம் தணிந்ததும் நரசிம்மரைத் தூக்க முடியாமல் போகவே, நரசிம்மருடன் இங்கேயே தங்கிவிட்டார். பங்குனி மாதத்தில் இங்கு தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  அசுரர்களின் தலைவரான இரணியன் தன் நாட்டு மக்களிடம் யாராவது நாராயண நம என்று சொன்னால் நாக்கை துண்டித்து விடுவேன். இரண்யாய நம என்றே சொல்ல வேண்டும். நானே கடவுள் என உத்தரவு போட்டு விட்டான். பெற்ற மகனான பிரகலாதனுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என சொல்லி விட்டான். ஆனால் மகன் மறுத்து விட்டான். விளைவு பிரகலாதன் சித்ரவதை செய்யப்பட்டான். எதற்கும் மசியாத பிரகலாதன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என் நாராயணன் என சொன்னதும், அருகிலிருந்த தூணை ஆவேசமாக உடைத்தான் இரண்யன். தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்தார் நாராயணர். உலகமே அஞ்சி நடுங்கியது. வீராவேசம் பேசிய இரண்யன் கலங்கிப் போனான். அவனது வீரம், கோபம் அடங்கிப் போனது. நாராயண மூர்த்தி அவனது உடலை கூறிய நகங்களால் கீறி கொன்று விட்டார். உக்கிரத்துடன் இருந்த நரசிம்மரின் கோபத்தை தணிப்பதற்காக அவரது மடியில் மகாலட்சுமி அமர்ந்தாள்.

இத்தலம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற பல்லவ மன்னரால் அமைக்கப்பட்டது என்று கோயிலில் அமைந்திருக்கும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கண்டகி நதிக்கரையில் இருந்த நரசிம்ம மூர்த்தியின் திருக்கோலம் கண்டு வணங்கிய ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து வந்தார். வான்வழியில் வந்த அவர், வைகறையில் தவம் செய்ய வேண்டி, இங்குள்ள கமலாலய குளக்கரையில் மலையை இறக்கி வைத்தார். தவம் முடித்து, மீண்டும் மலையை தூக்க முயற்சித்த போது, முடியாமல் தவித்தார். அப்போது அன்னை மகாலட்சுமி, என் எண்ணப்படியே நீ நரசிம்ம மூர்த்தியை இங்கு கொண்டு வந்தாய். எனவே, நீ ராமனுக்கு செய்யும் கடமைகளை முடித்து, நரசிம்ம மூர்த்தியை வணங்கி வீடு பேறு பெறுக என்று உத்தரவிட்டார். அதன்படியே தொழுத கையுடன் நின்று நரசிம்ம மூர்த்தியை வணங்குகிறார் அனுமன்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar