Araikasu Amman Temple : Araikasu Amman Araikasu Amman Temple Details | Araikasu Amman- Ratnamangalam | Tamilnadu Temple | அரைக்காசு அம்மன்
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அரைக்காசு அம்மன்
  தல விருட்சம்: வில்வம்
  ஊர்: ரத்னமங்கலம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடியில் வருஷாபிஷேகம், நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  தொலைந்ததை மீட்டுத்தரும் அம்பாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம், வண்டலூர்-600 048. சென்னை.  
   
போன்:
   
  +9144 2431 4572, 94440 20084. 
    
 பொது தகவல்:
     
  அம்மன் அமர்ந்த கோலத்தில் அருளுகிறாள்.  
     
 
பிரார்த்தனை
    
  இழந்த பொருள் கிடைக்க, ஞாபக மறதி நீங்க இவளிடம் வேண்டிக்கொள்ளலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, அம்பிகை அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  அம்பாள் அமைப்பு: பார்வதியின் அம்சமான இந்த அம்பிகை 4 கரங்களுடன் பாசம், அங்குசம் ஏந்தி, பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். தலையில் நாக கிரீடம், பிறைச்சந்திரன் மற்றும் கையில் சூலம் இருக்கிறது. இவளுக்கு மஞ்சள் வஸ்திரமே பிரதானமாக அணிவிக்கப்படுகிறது. அம்பாள் எதிரே சிம்ம வாகனம் உள்ளது.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. இவளது சன்னதியில் அரைக்காசு அம்மன் படம் பொறித்த டாலர் பிரசாதம் தருகின்றனர். 108 எண்கள் பொறிக்கப்பட்ட யந்திரம் ஒன்று இத்தலத்தில் உள்ளது. பக்தர்கள் ஏதேனும் ஒரு எண்ணைத்தொட்டு தங்கள் பலனைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அம்பிகைக்கு வெல்லத்தை பிரதான நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள்.

தொலைந்த பொருள் வேண்டுமா?: ஞாபக மறதியால் பொருள் வைத்த இடம் தெரியாமல் தேடுபவர்கள் இவளை மனதில் நினைத்து வேண்டிக்கொள்ள, அப்பொருள் உடன் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. காணாமல் போன பொருள் மட்டுமின்றி, நம் குடும்பத்தில் யாரேனும் காணாமல் போய் அவர்கள் திரும்ப கிடைக்க வேண்டுமானாலும் இவளை வணங்கலாம்.

பொருள் கிடைத்துவிட்டால் வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து, வெல்லம், சுக்கு கலந்த பானகம் நைவேத்யம் படைக்க வேண்டும். இந்த கோயிலுக்கு மிக அருகில் லெட்சுமி குபேரருக்கு தனிக்கோயில் இருக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  புதுக்கோட்டை பகுதியில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை இஷ்ட தெய்வமாக வணங்கி வந்தனர். இவளுக்கு நவராத்திரி விழா கொண்டாடியபோது, பக்தர்களுக்கு பிரசாதமாக அரிசி, வெல்லம் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்த அரைக்காசில், அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். இதனால் இந்த அம்பிகைக்கு, "அரைக்காசு அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.

ஒருமுறை, மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருள் மீண்டும் கிடைக்க வேண்டி இந்த அம்பாளிடம் வேண்டினார். அதுவும் கிடைத்து விட்டது. அன்றுமுதல் தொலைந்த பொருளை மீட்டுத்தரும் தெய்வமாகவே இவளை மக்கள் கருதினர்.

அரைக்காசு அம்மனுக்கென தமிழகத்தில் தனிக்கோயில் எதுவும் இல்லை. ஒரு சில கோயில்களில் அவளுக்கு சன்னதி மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அரைக்காசு அம்மனை மூலவராகக் கொண்டு, இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தொலைந்ததை மீட்டுத்தரும் அம்பாள்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.