Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பகவதி அம்மன்
  ஊர்: கொடுங்கலூர்
  மாவட்டம்: திருச்சூர்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  தைமாதம் 1 முதல் 4ம் தேதிவரை "தாழப்புலி' என்ற உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்கள் எண்ணை, குங்குமம், மஞ்சள், பூ இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது. கோயில் அமைப்பு: எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம், ஆறடி உயரம், வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள்பாலிக்கிறாள். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை "வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். கோயில் நுழைவு வாயிலில் ÷க்ஷத்திர பாலகர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோயில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.  
   
போன்:
   
  +91- 480-280 3061. 
    
 பொது தகவல்:
     
  கோயில் அமைப்பு: எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம், ஆறடி உயரம், வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள்பாலிக்கிறாள். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை "வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம்.

கோயில் நுழைவு வாயிலில் சேத்திர பாலகர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லும் பெருமைமிகு வரலாற்றுப் பின்னணியையும் இது வாய்க்கப் பெற்றுள்ளது. 7ம் நூற்றாண்டில் சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய வரலாற்றுக்கீர்த்தியும் இதற்குண்டு. கடற்கரைக்கு அருகில் அமைந்திருப்பதால் ஒரு முக்கிய வணிக கேந்திரமாக அந்நாளில் இது திகழ்ந்திருக்கிறது. நவீன வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஆசியா மைனர் மற்றும் எகிப்து போன்றவற்றுடன் இந்த நகரம் வாணிபத்தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன வரலாற்றோடு கலந்த செழுமையான பாரம்பரியம் புராதன காலத்திலேயே கொடுங்கல்லூர் நகரம் முக்கியமான வாசனைப்பொருள் ஏற்றுமதி நகரமாக பிரசித்தி பெற்று விளங்கியிருக்கிறது. யவனப்பிரியா என்ற பெயரில் அந்நாளில் அழைக்கப்பட்ட மிளகு இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. கடல் மற்றும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களால் சூழப்பட்டுள்ள இந்த பழமையான நகரம் மிக சுவாரசியமான - வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய நாகரிக சான்றுகளையும் பெற்றுள்ளது. அதாவது கி.மு 1 ம் நூற்றாண்டிலேயே இந்த துறைமுக நகரம் கடல் சார் வாணிபத்தில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  அம்மை நோய் கண்டவர்கள் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

"துலாபார வழிபாடு' இங்கு சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான்.

ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும்.

உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது.

கொடுங்கல்லூரின் பாரம்பரியச் செழுமையானது இதன் கடற்கரை துறைமுக அமைப்பின் மூலம் வாய்க்கப்பெற்றுள்ளது. கிறிஸ்த்துவம், ஜூதாயிசம், இஸ்லாம் மற்றும் பல அயல் நாட்டு மத வடிவங்கள் இந்த கடற்கரை வழியாகவே இப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்றே கூறலாம்.
 
     
  தல வரலாறு:
     
  சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வ சீமாட்டியான கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் கூடா நட்பால் செல்வங்களை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறான். சொத்துக்களை இழந்த அவன் கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது, மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, இவன் மேல் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசபைக்கு சென்று மன்னனை சபிக்கிறாள். மதுரையை எரித்து விடுகிறாள். பின் அதே கோபத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.

மதுரையை எரித்த பிறகு உக்கிர கோலத்தில் கண்ணகி இந்த கோயிலுக்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டிருக்கிறாள். அதன் பயனாக கண்ணகியை தன்னுள் இழுத்துக்கொண்டு அவருக்கு முக்தி வழங்கியதாக இங்குள்ள தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கண்ணகி முக்தி அடைந்த இடம் என்பதை தாண்டி முப்பெரும் தமிழ் மன்னாரில் ஒருவரான சேரர்களின் ஆட்சி காலத்தின் போது மகோதயாபுரம் என இவ்விடம் அழைக்கப்பட்டு சேர ஆட்சியின் தலைமை பீடமாகவும் திகழ்ந்திருக்கிறது. இக்கோயிலை பற்றி சொல்லப்படும் மற்றொரு கதைப்படி விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை 'தருகா' என்ற அரக்கன் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க சிவனை நோக்கி வணங்கியதாகவும் அதன் பயனாக பார்வதி தேவி பத்ர காளியாக வந்து அசுரனை அழித்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

கொடுங்களூர் பகவதி அம்மன் கோயில்: உலகத்தில் இருக்கும் பத்ர காளி அம்மன் கோயில்களிலேயே மிகவும் உக்கிரமான ரூபங்களில் இருக்கும் இடமாக கொடுங்களூர் கோயில் சொல்லப்படுகிறது. இங்கே எட்டு கரங்களுடன் அதி உட்கிரமாக அருள்பாலிக்கிறார் கொடுங்களூர் பகவதி அம்மன்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை "வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar