Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சித்திரபுத்திரர்
  ஊர்: கோடாங்கிபட்டி.
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ராபவுர்ணமி.  
     
 தல சிறப்பு:
     
  தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி -625547 தேனி மாவட்டம்.  
   
போன்:
   
  +91-99944 98109, 94865 76529 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில் ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ் வநாதர் திருக்கோயில், அருள்மிகதிருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில், ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.    
     
 
பிரார்த்தனை
    
 

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி. எனவே, கேதுதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  காமதேனுவின் மகன்: இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் , "சித்திரபுத்திரன்' என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவன் இவரிடம் ஒப்படைத்தார்.

சித்திரபுத்திரர் சிறப்பு: இவர் பிறந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், நமது பாவங்களை குறைப்பார் என்பது நம்பிக்கை. இவரது மனைவி பிரபாவதிக்கு இங்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்ரா பவுர்ணமியன்று பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அன்று வாசலிலும், பூஜை அறையிலும் கோலமிட்டு, சித்திரகுப்த ஸ்லோகம் சொல்ல அவர் நமது இல்லத்துக்கு வந்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

சித்திரபுத்திரரின் பொருள்: சித்திரம் என்றால் "ஆச்சரியமானது', "குப்தம்' என்றால் "ரகசியம்' என்று பொருள். எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதிவிடும் சித்திரபுத்திரரின், கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமாக இருக்கும். எனவேதான் இவர் "சித்திரகுப்தன்' எனப்படுகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  சிவன், ஜீவராசிகள் செய்யும் காரியங்களை கணக்கு எழுதுகிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அகில உலகிற்கும் மூல காரணமாகிய சிவன் ஏடும், எழுத்தாணியும் கொண்டு தாமே கணக்கு எழுதுவது இல்லை. அதற்காக ஒரு தேவதையை படைக்க எண்ணினார்.ஒருமுறை அவர் சக்திதேவியை பார்க்க, பார்வையின் குறிப்பறிந்த அவள் ஒரு சித்திரம் வரைந்தார். அதற்கு இருவரும் உயிரூட்ட அதிலிருந்து தோன்றியவரே சித்திரபுத்திரர் ஆவார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar